• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மொபைல் கூட பயன்படுத்த தெரியாத யோகியெல்லாம் முதல்வரா? - அகிலேஷ் யாதவ்

மொபைல் கூட பயன்படுத்த தெரியாத யோகியெல்லாம் முதல்வரா? - அகிலேஷ் யாதவ்

Yogi adityanath

Yogi adityanath

உத்தரகண்டில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு யோகி ஆதித்யநாத் புலம்பெயர்ந்து வராமல் இருந்திருந்தால், உத்தரப் பிரதேச மக்கள் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள்

  • Share this:
மொபைல் போனைக் கூட பயன்படுத்தத் தெரியாதவர் தான் முதல்வர் யோகி ஆதித்யநாத் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 2017ம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த பாஜக, யோகி ஆதித்யநாத் தலைமையில் எதிர்வரும் தேர்தலையும் சந்திக்க இருக்கிறது. இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளது. பாஜகவுக்கு போட்டியாளராக சமாஜ்வாதி கட்சி விளங்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் கூறியதாவது, “உத்தரப்பிரதேசத்துக்கு யோகி சர்க்கார் (அரசு) தேவையில்லை, யோக்யா சர்க்கார் (சிறந்த அரசு) தான் தேவை. நான் கேள்விப்பட்டவரையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு லேப்டாப், மொபைல் போன்களை கூட பயன்படுத்த தெரியாது. இணையத்தையும் பயன்படுத்த தெரியாது. இவர் மாநில முதல்வர்” இவ்வாறு தெரிவித்தார்.

Also read:  நடிகர் சூர்யா பட பாணியில் ஒரு உண்மை சம்பவம் - ஒரு துயர வாழ்க்கை..

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக ஜெய்ப்பூர் வந்திருந்த அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் வேலைவாய்ப்பின்மை தான் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை. விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என கோருகிறார்கள். விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்திருக்கிறது. உத்தரகண்டில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு யோகி ஆதித்யநாத் புலம்பெயர்ந்து வராமல் இருந்திருந்தால், உத்தரப் பிரதேச மக்கள் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள் என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Also read:  கோயில் உண்டியலில் பணத்தை திருடும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்த திருடன் - சிசிடிவி சுவாரஸ்யம்

உத்தரகண்ட் மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மாநிலமாகும். மாநில பிரிப்புக்கு முன் உத்தரகண்டில் இப்போது இருக்கும் பவுரி கர்வால் அருகேயுள்ள பஞ்சூர் எனும் கிராமத்தில் அஜய் மோகன் என்ற பெயரில் 1972ம் ஆண்டு பிறந்தவர் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: