Home /News /national /

யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது: மத்திய அரசு

யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது: மத்திய அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் நலன் கருதியே தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    எவாரா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் அவசியத்திலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசியை செலுத்துமாறு இந்திய அரசாங்கமோ, மத்திய சுகாதார அமைச்சகமோ நிர்பந்திக்கவில்லை. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் நலன் கருதியே தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் படிக்க: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகமாகி ஓர் ஆண்டு நிறைவு!

    மேலும், பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி பரவலாக விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அச்சு, எலக்ட்ரானிக் ஊடகம், சமூக வலைதளம் என எல்லாவற்றிலுமே தடுப்பூசி செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    அதை செயல்படுத்த சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், யாருடைய விருப்பத்துக்கு மாறாகவும் தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது.

    அதேபோல், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்துச் செல்லுமாறு எவ்வித உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆட்டுக்கு பதிலாக ஆடு பிடித்திருந்தவர் தலையை வெட்டிய ‘மது போதை’ ஆசாமி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19

    அடுத்த செய்தி