மம்தா பானர்ஜியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை! பிரதமர் அலுவலகம் விளக்கம்
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
- News18
- Last Updated: May 5, 2019, 4:00 PM IST
ஃபோனி புயல் சேதம் குறித்து கேட்டறிவதற்கு பிரதமர் மோடியால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலத்தின் சில மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பல பகுதிகளை கடுமையாக தாக்கியது. சுமார் 175 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஒடிசா, மேற்குவங்கத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டது.
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அதேவேளையில், மேற்கு வங்கத்தில் மாநில ஆளுநருடன் மட்டும் பேசி புயல் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்த மோடி, முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசாதது ஏன்? என்று சர்ச்சை கிளம்பியது. இவ்விவகாரம் தொடர்பாக இன்று விளக்கமளித்த பிரதமர் அலுவலகம், ’மம்தா பானர்ஜியை நாங்கள் இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். முதல்முறை அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை அழைத்தபோது, அவர் உங்களைத் தொடர்பு கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மம்தா பானர்ஜியிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை’ என குறிப்பிட்டுள்ளது.
Also see:
வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலத்தின் சில மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பல பகுதிகளை கடுமையாக தாக்கியது. சுமார் 175 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஒடிசா, மேற்குவங்கத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டது.
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அதேவேளையில், மேற்கு வங்கத்தில் மாநில ஆளுநருடன் மட்டும் பேசி புயல் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்த மோடி, முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசாதது ஏன்? என்று சர்ச்சை கிளம்பியது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see: