ஹோம் /நியூஸ் /இந்தியா /

எந்நேரமும் வெளிநாட்டிலேயே இருக்க முடியாது - ராகுல் காந்தியை வாரிய மம்தா பானர்ஜி

எந்நேரமும் வெளிநாட்டிலேயே இருக்க முடியாது - ராகுல் காந்தியை வாரிய மம்தா பானர்ஜி

Mamata Banerjee - Rahul Gandhi

Mamata Banerjee - Rahul Gandhi

காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குறித்து மம்தா பேசிய கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராகுல் காந்தி எந்நேரமும் வெளிநாட்டிலேயே இருக்க முடியாது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்தும் வகையில் காய் நகர்த்தி வருகிறார். இந்த ஆண்டின் மத்தியில் நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மம்தா தனது கவனத்தை கோவா, திரிபுரா மாநிலங்கள் பக்கமாக திருப்பியிருக்கிறார். அம்மாநில சட்டமன்ற தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸை களமிறக்க பம்பரமாக சுழன்று வருகிறார். அதே நேரத்தில் அவரின் கட்சியில் மாற்றுக் கட்சியினர், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அதிகளவில் இணைந்து வருகின்றனர்.

போதாக்குறைக்கு இந்தியாவின் தேர்தல் அரசியலின் சாணக்கியராக புகழப்படும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மம்தாவுக்கு பக்கபலமாக இருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சி மீது மம்தா பானர்ஜியும், பிரசாந்த் கிஷோரும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து மம்தா பேசி வருகிறார்.

Also read:  44 கோடி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தயார் - 2 வாரங்களில் அறிவிப்பு வெளியாகிறது

அதன்படி, மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருகை தந்துள்ள மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார். தற்போது மும்பையில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமை வகிப்பாரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்றே இப்போது இல்லை. பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வலுவான மாற்றை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனிடையே, தொழிலதிபர்கள், அறிஞர்கள் என சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, எதிர்கட்சிக்கு ஆலோசனை தெரிவிக்க முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸிடம் வலியுறுத்தினேன். ஆனால் அந்த ஆலோசானை வீணாகத்தான் போனது.

Also read:    ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணி அமைக்கும் மம்தா

அரசியலில் தொடர் முயற்சி அவசியம், எந்நேரமும் நீங்கள் வெளிநாட்டிலேயே இருக்க முடியாது என ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரை சாடி பேசினார் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் போட்டியிடும் போது எங்கள் கட்சி கோவாவில் போட்டியிட முடியாதா என பேசினார்.

காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குறித்து மம்தா பேசிய கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றால் என்னவென மம்தாவுக்கு தெரியாதா? அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவும் மம்தா மம்தா என கோஷமிடுவதாக கருதுகிறார். மேற்குவங்கம் மட்டுமே இந்தியா கிடையாது, அதே போல இந்தியா என்பதும் மேற்குவங்கம் மட்டும் கிடையாது. மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா செய்த காரியங்கள் தற்போது மெல்ல வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறுகையில், காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி, உயிர் இல்லாத உடல் போன்றது என தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Congress, Mamata banerjee, Rahul gandhi