Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

டூரிஸ்ட்களுக்கு கஞ்சா சப்ளை.. கல்லூரி மாணவருடன் கூட்டுசேர்ந்த ஆசிரியர் - கையும் களவுமாக சிக்கிய இருவர்

டூரிஸ்ட்களுக்கு கஞ்சா சப்ளை.. கல்லூரி மாணவருடன் கூட்டுசேர்ந்த ஆசிரியர் - கையும் களவுமாக சிக்கிய இருவர்

புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry News : புதுச்சேரியில் வீட்டை வாடகை எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்த மருத்துவ மாணவர்,உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் குமார்(25). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார்.இவரும் இவரது  நண்பரான விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியை சார்ந்த ஸ்டீபன் (30) ஆகியோரும் கோட்டகுப்பம் அருகே வீடு வாடகை எடுத்து தங்கி உள்ளனர்.

அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கோட்டக்குப்பம் போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் இருவரும் மாணவர்களும் மற்றும்  சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது  செய்த கோட்டக்குப்பம் போலீசார் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுற்றுலாப் பயணிகளிடம் மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Cannabis, Puducherry, Tamil News