புதுச்சேரி அரசின் பால் நிறுவனத்தில் ரசாயனம் கலக்காத கேண்டி ஐஸ் வகைகள் அறிமுகம்

புதுச்சேரி அரசின் பால் நிறுவனத்தில் ரசாயனம் கலக்காத கேண்டி ஐஸ் வகைகள் அறிமுகம்

புதுச்சேரி அரசின் பால் நிறுவனத்தில் ரசாயனம் கலக்காத  கேண்டி ஐஸ் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரி  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பான்லே நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. கடந்த 1955ம் ஆண்டு சிறிய கூட்டுறவு பால் சங்கம் தொடங்கப்பட்டு, 1977ம் ஆண்டு கூட்டுறவு ஒன்றியமாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து, புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமாக (பாண்லே) மாற்றப்பட்டு, புதுச்சேரியில் தற்போது வரை லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

இங்கு நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து, 67 பாண்லே விற்பனையகங்கள் மூலம் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல் பால் உப பொருள்கள் பலவற்றை  உற்பத்தி செய்து வருகிறது.

கொரோனாவால் சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டாலும் ஒரு நாள் கூட விடாமல் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான பாலை கொண்டு செல்கிறது பாண்லே.
இந்நிலையில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையான ஐஸ்கிரீம், கேண்டி ஐஸ் (குச்சி ஐஸ்) உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. பாண்லேவில் 10 வகையான ஐஸ்கிரிம்கள் உள்ள நிலையில், தற்போது இரண்டு புதிய வகை கேண்டி ஐஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Also see:

 

இது குறித்து பாண்லே பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு மேலாளர்  இமயவர்மன் கூறுகையில், பாண்லே நிறுவனம் பால் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்களை லாபகரமாக விற்பனை செய்து வருகிறது. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்தமான ஐஸ்கிரீம் வகைகளைச் சந்தைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மேங்கோ டூயட், ராஸ்பெரி டூயட் என்ற பெயரிலான இரண்டு புதிய வகை கேண்டி ஐஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவை ரசாயன கலப்பின்றி  குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் இயற்கை பழச்சாறைப் பாலுடன் கலந்து, தரமாக, தூய்மையாக, சுவையாக தயாரிக்கப்படுகின்றன என்றார்.

மேலும், இந்த கேண்டி ஐஸ்கள் தலா ரூ.15 விலையில் விற்கப்படும் என்றும், இதனை பொது மக்கள் வரவேற்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆயிரம் பேர் பணியாற்றும் இந்நிறுவனத்தில் உரிய பாதுகாப்புடன் கொரோனா காலத்திலும் தடையின்றி பாலை உற்பத்தி செய்து வருவதாக விற்பனைப் பிரிவு உதவி மேலாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.
Published by:Rizwan
First published: