ஓட்டு இயந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து - புலம்பும் வேட்பாளர்!

வாக்குபதிவு இயந்திரம்

“எலிகளால் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது" என்று தொகுதியின் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரவில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து எனக் கூறி, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று வேட்பாளர் நரேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதிகளில் கடந்த மாதம் 18-ம் தேதியே ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. அதன் பின்னர் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மதுராவில் உள்ள மண்டி சமிதி பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மைய அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்றும் வேட்பாளர் நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார்.அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“எலிகளால் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது" என்று தொகுதியின் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Also see...  நண்பரை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு சாவகாசமாக நடந்து வெளியேறிய சக நண்பர்கள்: நடந்தது என்ன?

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: