முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீர் குறித்த ஃபேஸ்புக் பதிவு! ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் முடிவில் மத்திய அரசு

காஷ்மீர் குறித்த ஃபேஸ்புக் பதிவு! ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் முடிவில் மத்திய அரசு

கோப்புப்படம்

கோப்புப்படம்

அவர்கள் தற்போது பாஸ்போர்ட்டை ரத்து செய்யவுள்ளனர். என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான், ஃபேஸ்புக் பதிவை திரும்பப் பெறவேண்டுமா?

  • Last Updated :

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் வெளிநாடுகளில் வசிக்கும் ஐந்து காஷ்மீரிகளின் பாஸ்போர்டை ரத்து செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து செய்து பதிவிட்டு வரும் வெளிநாட்டில் வசிக்கும் ஐந்து காஷ்மீரிகளின்  பாஸ்போர்டை ரத்து செய்யும் முடிவில் மத்திய அரசு உள்ளது என்று ஆங்கில ஊடகமான ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டில்(huffingtonpost) செய்தி வெளியாகியுள்ளது.

அந்தச் செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை அதிகாரி ஆகஸ்ட் 29-ம் தேதி பதிவிட்டுள்ள ட்விட்டில், ‘ஐந்து பேரின் பெயர்களும் அவர்களுடைய ஃபேஸ்புக் புரோபைல் போட்டோவையும் வெளியிட்டிருந்தார். அந்த ஐந்து பேரும் போலிச் செய்திகளையும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்தி பரப்புகின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டிருந்தது என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தற்போது குவைத்தில் பணியாற்றிவருகிறார். அவர், காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுகிறார் என்று அவர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆகஸ்ட் 20-ம் தேதி ஸ்ரீநகரைச் சேர்ந்த இயற்பியலாளரின் ஃபேஸ்புக் பதிவில், காஷ்மீரியை இந்திய ராணுவம் துன்புறுத்தியது என்று பதிவிட்டிருந்தார். அவர், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் கல்வி பயின்றுவருகிறார். அவருடைய பதிவை இந்திய ராணுவம் மறுத்திருந்தது.

இந்த விவகாரம் குறித்து ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டுக்கு பேட்டியளித்த ராஜோரி மாவட்ட சிறப்பு காவல்கண்காணிப்பாளர், ‘அந்த ஐந்து பேரின் பதிவு இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர்கள் இந்திய அரசுக்கு எதிராக ஜிகாதிகளாக மாறுவதற்கு தயார் என்று கூறியுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு வரவழைப்பதற்காக பாஸ்போர்டை ரத்து செய்யும் பணியும் கட்டாயம் தொடங்கும்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த இயற்பியலாளர், ‘அவர்கள் தற்போது பாஸ்போர்ட்டை ரத்து செய்யவுள்ளனர். என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான், ஃபேஸ்புக் பதிவை திரும்பப் பெறவேண்டுமா? உண்மையில் அந்தப் பதிவை திரும்பப் பெற நான் விரும்பவில்லை. எனக்குத் தெரியும் நான் பொய் சொல்லவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர்கள், ‘சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவுக்காக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்டை ரத்து செய்யவது முன்னெப்போதும் இல்லாத ஒரு நடைமுறை’ என்று தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:

top videos

    First published:

    Tags: Jammu and Kashmir