நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தியர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வார்கள். இந்தநிலையில், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி காட்சி வாயிலாக தீபாவளியை கொண்டாடினார். தனது அலுவலக அறையில் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடிய ட்ரூடோவுடன் கனடாவில் அரசியல் தலைவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இணைந்து தீபாவளியை கொண்டாடினர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ருடோ, ' உண்மை, ஒளி மற்றும் நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
Diwali reminds us that truth, light, and goodness will always prevail. To celebrate that hopeful message and mark this important festival, I joined a virtual celebration earlier this evening. Happy Diwali to everyone celebrating! pic.twitter.com/2xLrqPW68u