Home /News /national /

குஜராத்தில் போலீஸார் கூட ஒப்பந்த ஊழியர்கள்தான், அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திலும் இதை நுழைக்கப் பார்க்கிறார் மோடி - திக்விஜய் சிங் சாடல்

குஜராத்தில் போலீஸார் கூட ஒப்பந்த ஊழியர்கள்தான், அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திலும் இதை நுழைக்கப் பார்க்கிறார் மோடி - திக்விஜய் சிங் சாடல்

Digvijaya Singh

Digvijaya Singh

காங்கிரஸ் கட்சி என்பது அடிப்படையில் ஒரு நவீன, சுதந்திரவாதக் கட்சி.இதன் முதன்மை குறிக்கோள் எப்பாடுபட்டாவது வேற்றுமையில் ஒற்றுமை என்ற சாராம்சமான இந்திய குணாம்சத்தை காப்பதே என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பலவீனம் அமைப்பு ரீதியானது.  இதனால் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் வலுவிழந்தது. வரும் காலங்களில் மக்களிடம் செல்வோம். பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்வோம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4,000 கிமீ வரை செல்வோம்.

இதில் முக்கியமான விஷயம் வெகுஜன ரீதியிலான தொடர்புதான். இதுதான் இத்தனையாண்டுகாலமாக காங்கிரஸின் பலவீனமாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, தலைவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்வதில்லை என்று குற்றம்சாட்டினால் இந்தியாவில் எத்தனை கட்சிகள் உட்கட்சித் தேர்தல் மூலம் இதை முடிவு செய்கிறது என்பதைக் கூறுங்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை நோக்கித்தான் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் கட்சிதான் ஜனநாயகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் கட்சியாக உள்ளது. இந்தியாவின் ஆன்மாவுக்கு வடிவம் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். மத நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை போன்ற நம் அரசியல் சாசன ஆன்மாவுக்கு வடிவம் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக தங்களை நிர்வகித்துக் கொள்ள முடியாது என்று கூறிய பிரிட்டீஷாருக்கு அவர்கள் கருத்து தவறு என்பதை நிரூபித்தது காங்கிரஸ் கட்சிதான்.

இன்று அரசியல் என்பது கருத்துருவம் சார்ந்ததாக மாறி விட்டது. அரசியல் என்பது சமூகத்தைப் பிளவுபடுத்துவதா என்று கேட்கிறோம். இனம், மதம், மொழி ரீதியாக பிரித்தாள்வதுதான் அரசியலா? அடுத்த எங்கள் பயணம் மத நல்லிணக்கத்தை நோக்கித்தான்.

இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் எப்போதும் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதில்லை மத அடிப்படை வாதத்தை மதவெறியைத் தூண்டுமாறு பேசும் முஸ்லிம்கள், இந்துக்கள் இருதரப்பையுமே காங்கிரஸ் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளது. இதில் நாங்கள் எப்போதும் தெளிவாகவே உள்ளோம்.

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, மதத்தின் பெயரால் பிளவு படுத்துகிறார்கள். இந்தியாவில் மதரீதியான போர்கள் நடந்ததில்லை என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம்.

அரசியல் போர்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளன, ஆனால் நம்பிக்கை அடிப்படையில் எந்த ஒரு போரும் இந்தியாவில் நடந்ததில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஸ்பெஷாலிட்டி’ என்னவெனில் எந்த ஒன்றையும் முதலில் அறிவித்து விடுவார், அதன் பிறகு சிந்திப்பார், அறிவிப்பதற்கு முன் சிந்திப்பது கிடையாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகளைப் பாருங்கள். கள்ள நோட்டை ஒழிக்க என்றார்கள் ஆனால் அப்போது 17.5 லட்சம் கோடியாக இருந்த கள்ள நோட்டுகள் இப்போது 28 லட்சமாக அதிகரித்துள்ளது.

மோடி மாடல் அரசு என்பது அவுட்சோர்சிங் செய்வதே. போலீஸ்காரர்கள் கூட குஜராத்தில் ஒப்பந்த ஊழியர்கள்தான் இதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இப்போது அக்னிபத் மூலம் ராணுவத்திலும் இதையே திணிக்கிறார். இதன் மூலம் நம் உயர் தொழில் நேர்த்தி ராணுவத்தின்மீதான புகழுக்குக் களங்கம் விளைவிக்கிறார்.

காங்கிரஸ் எப்போதும் உரிமைகள் அடிப்படையிலான மைய ஒருங்குவிப்பு இல்லாத அதிகாரப்பகிர்வு ஆட்சிமுறையையே நடத்தி வந்தது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜிய அடிப்படையிலானதுதான் எங்களுடையது. எங்களது அடிப்படையிலிருந்து நாங்கள் பிறழ மாட்டோம்.
இவ்வாறு கூறினார் திக்விஜய் சிங்
Published by:Muthukumar
First published:

Tags: Agnipath, Congress, Modi

அடுத்த செய்தி