வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா ? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா ? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

விவசாயிகள் போராட்டம் முடிந்து சொந்த ஊர் திரும்பும்போது காட்டுத்தீ போல கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

  • Share this:
விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு முடியும் வரை, வேளாண் சட்டங்கள், அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத்தில் 2-வது நாளாக தலைமை நீதிபதி போப்டே அமர்வில் நடைபெற்றது அப்போது போராட்டத்தால் காய்கனிகள், பால் விலை உயர்ந்துள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது

போராட்டம் நடத்துவது விவசாயிகளின் அடிப்படை உரிமை எனவும், போராடும் விவசாயிகள் மீது போலீசார் வன்முறையை காட்டக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர். சுதந்திரமான குழு அமைத்து அதில் விவசாயிகளும், மத்திய அரசும் கோரிக்கைகளை முன் வைக்கலாம் என்ற நீதிபதிகள், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் போராட்டத்தின் தன்மையை எப்படி மாற்றலாம் என ஆலோசிக்க வேண்டும் என்றனர்

போராட்டம் முடிந்து சொந்த ஊர் திரும்பும்போது காட்டுத்தீ போல கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விவசாயிகள் சாலையில் ஏற்படுத்திய தடைகளை நீக்க மறுத்ததுடன், விவசாயிகள் தரப்பு வாதங்களை கேட்காமல், குழு அமைக்கவோ, வேறு உத்தரவை பிறப்பிக்கவோ முடியாது என நீதிபதிகள் கூறினர். வழக்கு முடியும் வரை சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு அரசிடம் கேட்டு சொல்வதாக மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான நோட்டீசை அனைத்து விவசாய சங்கங்களுக்கும் அனுப்பும்படியும், விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: