ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!

ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய உத்தரவிடக் கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!
ரஃபேல்
  • Share this:
ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

எனவே ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஸ்வந் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந் பூஷன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


அந்த வழக்கை கடந்த 2018 டிசம்பர் 14 -ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையின் போது பல்வேறு முக்கிய ஆதாரங்கள் ஆராயப்படவில்லை என்றும், எனவே அந்த உத்தரவை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் உள்ளிட்ட அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையின் போது ரஃபேல் வழக்கு தொடர்பாக மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் திருடப்பட்டவை என்றும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு வாதிட்டது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு துறை ஆவணங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.ஆனால் முறைகேடு மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழும்போது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளின் தகவல்களையும் வெளியிட அதே தகவல் அறியும் உரிமைச்சட்டம் அனுமதித்திருப்பதாக நீதிபதி கே.எம்.ஜோசப் கருத்து தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Also see... சீமான் பிரசார பேச்சை ரசித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தொகுதி வேட்பாளர்

Also see... தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையேயான போட்டிதான் இந்த தேர்தல்


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading