நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா கமல்நாத்...? எண்கள் சொல்லும் கணக்கு என்ன...?

”பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா இன்று பா.ஜ.க இணைந்தார்”

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா கமல்நாத்...? எண்கள் சொல்லும் கணக்கு என்ன...?
கமல்நாத் பதவியேற்பு நிகழ்ச்சியில் சிந்தியா மற்றும் சிவ்ராஜ்சிங் சவுகான்
  • News18
  • Last Updated: March 11, 2020, 4:50 PM IST
  • Share this:
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சில மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 2018-ம் ஆண்டு இம்மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறியது.

மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் வென்றது. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. எனினும், மாநில அரசியலில் கோலூன்றி இருக்கும் கமல்நாத் மற்றும் ஜோதிராதிர்தியா சிந்தியா ஆகிய இரு தலைவர்களில் யாருக்கு முதல்வர் வாய்ப்பு என்ற கேள்வி எழுந்தது.

எம்.எல்.ஏ.க்கள் இடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதைக்கு, காங்கிரஸ் தலைமை சிந்தியாவை சமாளித்தது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி கிடைக்க, சிந்தியா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார்.
சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி என்ற வரிகளை அவர் நீக்கியபோது, சிந்தியா அதிருப்தியில் இருக்கிறார் என்று செய்திகள் பறந்தன. அதற்கேற்ப, கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிய மோதல் போக்கு முடிவுக்கு வரும் விதமாக, நேற்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.

அதன் தொடர்ச்சியாக இன்று, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.க இணைந்தார்.சிந்தியாவின் விலகலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேர் ராஜினாமா செய்தனர். அதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், கமல்நாத் அரசுக்கு ஆதரவாக இருந்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.சிந்தியாவுக்கு ஆதரவாக உள்ள 6 அமைச்சர்களை நீக்கவும் கமல்நாத், மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார். எனினும், ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின், ராஜினாமாவை சட்டப்பேரவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அரசியல் பரபரப்பு மேலும் அதிகரிக்க உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 230 இடங்களில் 2 பாஜக எம்.எல்.ஏ.க்கள் மறைவால் அந்த இடங்கள் காலியாக உள்ளன. இதனால், அவையின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 115 இடங்கள் தேவை என்ற நிலையும் உள்ளது.4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மொத்தம் 121 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் ஆட்சியில் உள்ளது. தற்போது, காங்கிரசில் இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். அவர்களது ராஜினாமா இன்னமும் சபாநாயகரால் ஏற்கப்படவில்லை.

ஒருவேளை 22 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால், சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணும் 104 ஆக குறையும். ராஜினாமாவால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் 92 ஆக குறையும். 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக இருந்தாலும் 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே கமல்நாத் அரசுக்கு இருக்கும்.

எனினும், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் 100 எம்.எல்.ஏ.க்கள் வரை இருந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் ஆட்சியை தக்கவைக்க கமல்நாத் அரசுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிறது. ஆனால், 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே சந்தேகமாக உள்ளது.

அதேவேளையில், பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதியாக உள்ளது. சபாநாயகர் எடுக்கும் முடிவிலே, கமல்நாத் அரசின் எதிர்காலம் இருக்கிறது. இந்த பரபரப்புகளுக்கு இடையே ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கமல்நாத் இன்று கூறியுள்ளார்.
Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also See...
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading