நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1-ந் தேதியும் , 5-ந் தேதியும் நடைபெறுகின்றன. இதில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாகவும் 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் சவுராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் பகுதிகளில் அடங்கியுள்ளன. 89 தொகுதிகளில் மணிநகர், மோர்பி, கோத்ரா உள்ளிட்ட 25 தொகுதிகள் விஐபி தொகுதிகளாகக் கருதப்படுகின்றன.
இதையும் படிக்க : ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் சிறுமிக்கு காயம் - பாஜக மீது குற்றச்சாட்டு
முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில் 167 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏ.டி.ஆர். என்னும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் போட்டியில் உள்ளது. இதில் 36 சதவிகித்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளர்களில் 35 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பா.ஜ.க.வில், 16 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பாஜக வேட்பாளர்கள் 89 பேரில் 79 பேர் கோடீஸ்வரர்கள். அதேபோல, காங்கிரஸில் 65 பேர், ஆம் ஆத்மி கட்சியில் 33 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முன்னாள் அமைச்சர் பர்ஷோத்தம் சோலங்கி, ஆறுமுறை எம்எல்ஏவாக இருந்த குன்வர்ஜி பவாலியா, மோர்பி விபத்தின் போது பலரின் உயிரை காப்பாற்றிய காந்திலால் அம்ருதியா, இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி ஆகியோர் முதல் கட்ட தேர்தலில் களம் காணும் முக்கியமானவர்கள்.
பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assembly Election 2022, Bjp campaign, Election Campaign, Elections, Gujarat