Home /News /national /

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றாக குரல் கொடுப்போம்.. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றாக குரல் கொடுப்போம்.. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

ஆண்களை விட பெண்கள் இருமடங்காக வேலை செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டு இடங்களிலும் பொறுப்புகளை சுமக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

  நியூஸ்18நெட்வொர்க் மற்றும் ட்ரூ காலர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய #ItsNotOk என்ற பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது, இந்த 21ஆம் நூற்றாண்டில், இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக உயர்ந்து வருகிறது, எனினும் பெண்கள் மீது நடந்து வரும் தொடர் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை காரணமாக இந்த சக்தி முழுமையடையாது.

  தற்போதைய உலகம் வேகமாக மாறி வருகிறது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் காண்கிறோம். அவர்கள் போர் விமானிகளாக, விளையாட்டில் பளு தூக்குதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை வீராங்கனைகளாக கடினமாக முயன்று ஆகாயத்தையே வென்று வருகின்றனர். இதையெல்லாம் செய்வதன் மூலம், பெண்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றுள்ளோம், மேலும் பலருக்கு அதிகாரம் அளிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளோம் என்று உலகிற்கு உறக்கச் சொல்கிறார்கள். எனவே பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை கடினமாக்காமல், அவர்களின் வெற்றி பயணத்தை கடினமாக்கும் தடைகளை தகர்ப்பது சமூகத்தின் கடமையாகும்.

  பல இளம் பெண்கள் தங்களை சிறப்பாக கவனிக்க தேவையில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்குத் தேவையானது அலுவலகங்களில் சக ஊழியர்களாகவும், தங்கள் வீடுகளில் சக உறுப்பினர்களாக நடத்தும் சமத்துவமும் கண்ணியமும் மட்டுமே.

  பெண்கள் தங்கள் வீடுகளிலும், தாங்கள் வேலை செய்யும் இடங்களிலும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது நம் காலத்தின் சோகமான உண்மை. வேலையை இழக்க நேரிடும், குடும்ப உறவுகளுக்கு இடையூறு ஏற்படும் என்ற பயத்தில் பலர் தங்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் குறித்து பேசுவதையும் புகாரளிப்பதையும் விட மௌனமாக அதனை கடந்த செல்வதையே தேர்வு செய்கிறார்கள். பெண்கள் வெளியே செல்ல விரும்பினாலும் அல்லது தங்கள் சொந்த வீட்டில் நிம்மதியாக வாழ விரும்பினாலும், பல துன்புறுத்தல்களை அமைதியாக சகித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சமூக சீரமைப்பு பல பெண்களுக்கு அமைதியாக சகித்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறது. ஆனால் இந்தியா கலாச்சார ரீதியாக பெண்கள் தங்கள் கண்ணியத்தை மட்டுமல்ல, தங்கள் நிலம் மற்றும் தங்கள் மக்களின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் ஒருவராக இருந்து வருகின்றனர். இது ராணி லக்ஷ்மிபாய், ராணி பத்மாவதி போன்றோரின் நிலம். அவர்களில் எவரும் செயலற்ற பார்வையாளர்களாக இருந்தது இல்லை, அவர்கள் உரிமை மற்றும் நீதிக்கான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள்.

  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் போற்றப்படவும், கௌரவிக்கப்படவும், மதிக்கப்படவும் காரணம் அவர்கள் எங்கும் அமைதியாக கடந்துவிடவில்லை. அலுவலகத்திலோ அல்லது பொது வாழ்க்கையிலோ அன்றாடம் நடக்கும் சாதாரண பாலினப் பாகுபாட்டை அமைதியாக கடப்பது சரியல்ல என்பதை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொல்லைகள் வரும்போது அமைதியாக இருப்பது சரியல்ல.

  ஆனால், வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் உள்ள ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளை வெளிப்படையாகப் பேசுவதையும், எதிர்த்துப் போராடுவதையும் பெண்களின் பொறுப்பாக மட்டும் விட்டுவிட முடியாது என்பதை உணர வேண்டியது அவசியம். ஒரு மனிதனின் அடிப்படைப் பொறுப்பாக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதில் ஆண்கள் கூட்டாக ஈடுபட வேண்டும். பெண்கள் வாழவும், வேலை செய்யவும், மனிதர்களாகவும் இருக்கக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அந்தச் சூழலை உணர்ந்து கொள்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

  பெண்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டிய பொறுப்பு ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் பெண்கள் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பெண் ஊழியர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக தங்களது மனிதவளக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.  பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மூலம் இந்தியா உண்மையான உலகளாவிய சக்தியாக மாறும் என பிரதமர் மோடி நம்புகிறார். மேலும், பெண்கள் சமத்துவத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் குறியீடு, 2020ல் பெண்கள் அனைத்து வகையான வேலைகளுக்கும் தகுதியுடையவர்கள் என்பதையும், இரவுப் பணிகளிலும் கூட வேலை செய்ய முடியும் என்பதையும் உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்கிறது. இரவில் பணிபுரிய பெண்களின் சம்மதம் கட்டாயம் மற்றும் இரவில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட நிறுவனமும் மற்றும் அரசும் ஏற்க வேண்டும்.

  பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டத்தை, 2013ல் இந்திய அரசாங்கம் இயற்றியுள்ளது, இது பெண்களுக்கு அவர்களின் பணி நிலையைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  மகப்பேறு நலன் (திருத்தம்) சட்டம், 2017ன் கீழ், மகப்பேறு விடுப்பு 12லிருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது, இதனால் பெண்கள் குழந்தைப் பேறு காரணமாக வேலையை விட்டு விலக வேண்டியதில்லை. இதனால் அவர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கும் .

  பெரும்பாலான ஆண்களை விட பெண்கள் இருமடங்காக வேலை செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டு இடங்களிலும் பொறுப்புகளை சுமக்கிறார்கள். ஆண்களும் இந்த பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு இந்த தியாகத்தின் உருவகமாக இருக்க பாடுபட்டால் நன்றாக இருக்கும்.

  ஒடுக்குமுறை என்பது தவறு. ஒடுக்குமுறைக்கு எதிராக மௌனம் காப்பதும் தவறு. பெண்கள் தனியாக இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியானதல்ல. நாம் அனைவரும் ஒன்றாக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: CNN-News18 crew, Delhi, Network 18, True Caller

  அடுத்த செய்தி