முகப்பு /செய்தி /இந்தியா / “கால் ஆஃப் தி ப்ளூ வாட்டர்”- இந்திய கடற்படையின் புதிய கீதம்..!

“கால் ஆஃப் தி ப்ளூ வாட்டர்”- இந்திய கடற்படையின் புதிய கீதம்..!

கடற்படை

கடற்படை

Call of the Blue Water - இந்தியக் கடற்படையின் புதிய கீதம்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி எழுதி, சங்கர் மகாதேவன்பாடிய, இந்திய கடற்படையின் புதிய கீதம் தற்போது வைரலாகி வருகிறது.

1971 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' (Operation Trident) போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

இந்த ஆண்டு, சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், விசாகப்பட்டினத்தில் மிகவும் பிரம்மாண்ட முறையில்  நடைபெற்றது. குடியரசுத் தலைவரும் முப்படைகளின் தலைவருமான  திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியக் கடற்படையின் புதிய கீதத்தை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.  பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி எழுதிய இந்த பாடலை, சங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.இந்த பாடல், தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

' isDesktop="true" id="853308" youtubeid="1eX-5QsW5yQ" category="national">

பாரம்பரியமாக, குடியரசுத் தலைவர் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் புதுதில்லியில் கடற்படை தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, முதல் முறையாக, தலைநகருக்கு வெளியே கடற்படை தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.  

First published:

Tags: Indian Navy, President, President Droupadi Murmu