• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'ராகுல் அண்ணா' புதுச்சேரியில் ராகுல் காந்தி, கல்லூரி மாணவிகள் கலகல சந்திப்பு

'ராகுல் அண்ணா' புதுச்சேரியில் ராகுல் காந்தி, கல்லூரி மாணவிகள் கலகல சந்திப்பு

கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி சந்திப்பு

கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி சந்திப்பு

ராகுல் காந்தியின் அழைப்பை அடுத்து அவரை ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.

  • Share this:
    புதுச்ரேியில் கல்லூரி மாணவிகளை சந்தித்த ராகுல் காந்தி என்னை சார் என்று அழைக்க வேண்டாம், என்னை அண்ணா என்று வேண்டுமானால் அழைக்கலாம் என்று கூறி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

    பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இதற்கான சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

    புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

    அதை தொடர்ந்து அரசு பாரதிதாசன் கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது நீங்கள் என்னை சார் என்று அழைக்க வேண்டாம். கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் அண்ணா என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள் என்றார். ராகுல் காந்தியின் அழைப்பை அடுத்து அவரை ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.

    இதனிடையே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நாளை ஏற்க உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: