Abir India: இளம் கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுக்கும் அபிர் இந்தியா!

மாதிரி படம்

தொண்டு செயல்களின் வலுவான நெறிமுறையால் உந்தப்பட்ட இந்த அறக்கட்டளை கலைஞர்களுக்கு கைகொடுப்பது மட்டுமல்லாமல், கலை ஆர்வலர்களுக்கான ஒரு துடிப்பான சந்திப்பு இடமாகவும் செயல்படுகிறது.

  • Share this:
அபிர் இந்தியா (Abir India) அறக்கட்டளையானது தங்கள் வருடாந்திர நிகழ்ச்சியான ஃபர்ஸ்ட் டேக் 2021 நிகழ்ச்சிக்காக இளம் இந்திய கலைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.. இந்த வருடத்திய நிகழ்ச்சியானது 5வது எடிஷனாகும். வரும் ஜூலை 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் சிறந்த 10 பேர் நிகழ்ச்சி ஒன்றில் கவுரவிக்கப்படுவார்கள். abirindia.org என்ற இணையதளபக்கத்தில் விண்ணப்பிப்பதற்கான விதிகள் மற்றும் கூடுதல் தகவல்களை கலைஞர்கள் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட நான்கு எடிஷன்களின் போது 8000 பேர் விண்ணப்பித்திருந்தனர், அவர்களில் 500 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 32 கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். கூச் பெகர், மார்கோவா, குல்பர்கா, சிலிகுரி, யவத்மால் மற்றும் இம்பால் என இந்தியாவின் 473 பகுதிகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. முந்தைய நிகழ்ச்சிகளின் போது பிரபலங்களான மல்லிகா சாராபாய், பிருந்தா மில்லர், சுபோத் கெர்கர், வீர் முன்ஷி, முசாஃபர் அலி, சீமா கோலி போன்றோர் நடுவர்களாக இருந்தனர். அச்சமயம் படைப்புகளின் தரம் மிகவும் நன்றாக இருந்தது, அவற்றில் பலவற்றை வாங்க நானே ஆசைப்பட்டேன் என சுபோத் கெர்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read:  காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்திய வரைபடத்தில் இருந்து தூக்கிய ட்விட்டர் - நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

ஓவியம், சிற்பங்கள், பீங்கான், கலப்பு ஊடகம் மற்றும் அச்சிட்டுகளில் கலைஞர்கள் தங்களின் படைப்புகளை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த அளவுக்கான தரத்தில் ஒரு நிகழ்வு நிச்சயமாக இளம் கலைஞர்களின் உற்சாகத்தை புதுப்பித்து, கலை சமூகத்தில் நம்பிக்கையையும் அபிலாஷையையும் கொண்டு சேர்க்கும்.

அபிர் இந்தியா என்பது அகமதாபாத்தை மையமாகக் கொண்ட லாப நோக்கற்ற அமைப்பாகும், இது ஓவியர், வடிவமைப்பாளர் மற்றும் இயற்கை சாய நிபுணர் ரூபி ஜக்ருத் அவர்களால் 2016-ல் தொடங்கப்பட்டது. இளம் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்க உறுதியளித்த அடித்தளம் இப்போது ஒரு திருவிழாவாக மலர்கிறது.

Also Read:   பெற்ற மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தந்தை! - கள்ளக்காதல் காரணமா?

தொண்டு செயல்களின் வலுவான நெறிமுறையால் உந்தப்பட்ட இந்த அறக்கட்டளை கலைஞர்களுக்கு கைகொடுப்பது மட்டுமல்லாமல், கலை ஆர்வலர்களுக்கான ஒரு துடிப்பான சந்திப்பு இடமாகவும் செயல்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் வாயிலாக கிடைக்கின்ற சந்திப்புகள் மற்றும் தகவல்களால் கலைஞர்கள் தங்களின் எல்லைகளை விரிவாக்க உதவிகரமாக அமையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தகவலுக்கு, ஹெலி படேலை 9099506989 என்ற எண்ணிலோ அல்லது office@abirspace.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.

 

 
Published by:Arun
First published: