Home /News /national /

அமேசான், ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்கள் அலுவலகங்களில் சி.சி.ஐ சோதனை- CAIT வரவேற்பு

அமேசான், ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்கள் அலுவலகங்களில் சி.சி.ஐ சோதனை- CAIT வரவேற்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அமேசான், ஃப்ளிப்கார்ட் தளத்தின் முன்னணி விற்பனையாளர்களின் அலுவலகங்களில் இந்திய போட்டி ஆணையம் சோதனை நடத்துவதற்கு அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

    அமேசான், ப்ளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தின் முன்னணி விற்பனையாளர்களாக உள்ள க்ளௌட்டெய்ல்(Cloudtail) மற்றும் அபாரியோ(Apario) அலுவலகங்களில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய போட்டி ஆணையம்(CCI) சோதனை நடத்தியுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமேசான் நிறுவனத்தின் முன்னணி விற்பனையாளர்களான க்ளௌட்டெய்ல், அபாரியோ நிறுவன அலுவலகங்களில் சிசிஐ அமைப்பு சோதனை நடத்திய சிஏஐடி வரவேற்கிறது. சிசிஐ அமைப்புக்கு பாராட்டு தெரிவிக்கிறது. சி.சி.ஐயின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத் தகுந்த ஒன்று. இந்தச் சோதனை கண்டிப்பாக அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிரான சிஏஐடியின் புகார்களை உண்மை என நிரூபிக்கும்.

    கடந்த மூன்று வருடங்களாக அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு எதிராக சி.ஏ.ஐ.டி தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறது. இதுதொடர்பாக சி.சி.ஐயில் புகாரும் அளித்துள்ளது. அதேநேரத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அமேசான், ப்ளிப்கார்ட் மேற்கொள்ளும் தாமத யுக்திகளுக்கு எதிராகவும் வலுவாக போராடிவருகிறது. சி.சி.ஐ சோதனையின் போது நாராயன் மூர்த்தியின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று சி.ஏ.ஐ.டி வலியுறுத்தியுள்ளது.

    கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், அமேசான், அபாரியோ நிறுவனங்களுக்கு எதிராக சி.ஏ.ஐ.டி கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானவையாகும். அதேநேரத்தில் இந்த இரண்டு விற்பனையாளர்கள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமேசானின் முதல் 20 இடத்தைப் பிடித்த விற்பனையாளர்களும் முழுமையாக சோதனை செய்யப்படவேண்டும்.

    அனைத்து சட்டங்களையும், இந்தியாவின் நேரடி அந்நிய முதலீட்டு கொள்கைகளையும் மீறியுள்ளது. இந்தியாவில் ஒற்றை நிறுவன சந்தையை உருவாக்க முயற்சி செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Amazon

    அடுத்த செய்தி