• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருள் அமேசான் மூலம் வாங்கப்பட்டது - அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருள் அமேசான் மூலம் வாங்கப்பட்டது - அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு

அமேசான்

அமேசான்

புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரசாயணப் பொருள்கள் அமேசான் மூலம் வாங்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய வர்த்தகர்கள் சபை குற்றம் சாட்டியுள்ளது.

  • Share this:
    புல்வாமா வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் அமேசான் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் போதைப் பொருள் விற்க்கப்பட்ட இந்த சம்பவம் முதலாவது சம்பவம் கிடையாது. 40 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகுண்டு தயாரிப்பதற்கு 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் மூலம் வேதிரசாயணப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் மார்ச் 2020-ம் ஆண்டு இந்த விவகாரம் தெரியவந்தது. 2020-ம் ஆண்டு இதுதொடர்பான விவகாரங்கள் செய்தியாக வெளிவந்தது.

    அதேபோல, அம்மோனியமும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அமேசான் ஆன்லைன் மூலம் ரசாயண வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் ரசாயணப் பொருள்கள், பேட்டரி உள்ளிட்ட பொருளை வாங்கியுள்ளார் என்பது தெரிந்தது. தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் இந்த நிறுவனம் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் போனது எப்படி என்பது தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: