விமானத்தின் விலை விபரங்கள் இல்லாமல் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கை இன்று தாக்கல்...!

மெஹ்ரிஷி நிதித்துறை செயலாளராக இருந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அவர் ஆய்வுசெய்வதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

news18
Updated: February 12, 2019, 12:11 PM IST
விமானத்தின் விலை விபரங்கள் இல்லாமல் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கை இன்று தாக்கல்...!
கோப்புப் படம்
news18
Updated: February 12, 2019, 12:11 PM IST
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

பிரான்ஸிடமிருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான தலைமை தணிக்கையாளரின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் இந்திய விமானப்படை மேற்கொண்ட 11 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இது இரண்டு பாகங்களாக இருக்கும் என்றும், முதல் பாகத்தில் 10 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களும், இரண்டாவது பாகத்தில் ரஃபேல் தொடர்பான விவரங்களும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று, ரஃபேல் விமானத்தின் விலை குறித்த தகவல்கள் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.

இதனிடையே, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தலைமைத் தணிக்கையாளர் ராஜீவ் மெஹ்ரிஷி ஆய்வு மேற்கொள்வதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
Loading...
மெஹ்ரிஷி நிதித்துறை செயலாளராக இருந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அவர் ஆய்வுசெய்வதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Also see...

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்