மாயமான ’கஃபே காஃபி டே’ நிறுவனர்... தொழில் தோல்வியால் தற்கொலையா?

சித்தார்த்தா மாயம் ஆகும் முன்னர் எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 11:33 AM IST
மாயமான ’கஃபே காஃபி டே’ நிறுவனர்... தொழில் தோல்வியால் தற்கொலையா?
V.G. சித்தார்த்தா
Web Desk | news18
Updated: July 30, 2019, 11:33 AM IST
’கஃபே காஃபி டே’ நிறுவனரும் கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா நேற்று முதல் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றான கஃபே காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா நேற்று திங்கள் கிழமை மாலை முதல் காணவில்லை. சித்தார்த்தா தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “எனது கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் எனது தொழிலை முதன்மையானதாக முன்னிறுத்த முடியவில்லை.

என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நீண்ட காலம் கடுமையாகப் போராடினேன். ஆனால், இதற்கு மேலும் இந்த அழுத்தத்தை என்னால் தாங்கமுடியாயாது. தனியார் பங்குதாரர் ஒருவரிடமிருந்து வரும் அழுத்தத்தை என்னால் தாங்கமுடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினரின் ரெய்டில் சிக்கினார் சித்தார்த்தா. கணக்கில் வராத 650 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது வருமான வரித்துறையின் அன்றைய இயக்குநர் (டிஜி) சித்தார்த்தாவை துன்புறுத்தியதாக அவர் எழுதியக் கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை மங்களுரூவின் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் தனது காரிலிருந்து இறங்கியுள்ளார் சித்தார்த்தா. காரிலேயே இருந்த வாகன ஓட்டுநர் நீண்ட நேரமாகியும் சித்தார்த்தா வராததால் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆற்றுப் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் தற்போது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சித்தார்த்தா முன்னாள் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் என்பதால் அரசியல் தலைவர்கள் பலரும் அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...