காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் ஆற்றில் கண்டெடுப்பு

News18 Tamil
Updated: July 31, 2019, 9:33 AM IST
காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் ஆற்றில் கண்டெடுப்பு
News18 Tamil
Updated: July 31, 2019, 9:33 AM IST
பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா நேற்று மாயமான நிலையில், அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க. வின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. இவர் பிரபல காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தார்த் தனது காரில் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் வழியில், நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறியுள்ளார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த்தா தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்கு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், தேடிப்பார்த்துள்ளார். ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. போனும் சுவிட்ச் ஆஃப் ஆனது.


இதையடுத்து, தகவல் அறிந்த போலீஸ் விசாரணையை தொடங்கினர்.

சித்தார்த்தா ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடிப்பார்த்தனர்.
இந்நிலையில், சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Loading...முன்னதாக, கடன் மற்றும் வருமான வரி பிரச்னையில் சிக்கியுள்ளதாக குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு சித்தார்த்தா கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...