Home /News /national /

Cabinet Reshuffle: இன்று 43 பேர் மத்திய அமைச்சராக பதவியேற்பு? வெளியானது உத்தேசப் பட்டியல்

Cabinet Reshuffle: இன்று 43 பேர் மத்திய அமைச்சராக பதவியேற்பு? வெளியானது உத்தேசப் பட்டியல்

சிந்தியா படத்துடன் காத்திருக்கும் தொண்டர்கள்

சிந்தியா படத்துடன் காத்திருக்கும் தொண்டர்கள்

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இன்று 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

    பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார்.

    அதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன.

    அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆளுநர்கள் நியமனம் இருந்தது. இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இன்றைய பதவியேற்பில் புதிய மற்றும் ஏற்கெனவே அமைச்சர்களாக உள்ளவர்கள் என்று 43 பேர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பதவியேற்கும் அமைச்சரவையில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் பெண்கள் உரிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

    மத்திய அமைச்சராக பதவியேற்கவுள்ளவர்கள் உத்தேசப் பட்டியல்

    சர்பானந் சோனோவால்
    ஜோதிராதித்ய சிந்தியா
    நாராயண் ரானே
    பூபேந்திர யாதவ்
    ஆர்.சி.பி சிங்
    அனுப்ரியா படேல்
    பசுபதி பாரஸ்
    அனுராக் தாக்கூர்
    புர்ஷோட்டம் ரூபாலா
    ஜி கே ரெட்டி
    கபில் பாட்டீல்
    மீனாட்சி லேகி
    ராகுல் கசாவா
    அஸ்வினி வைஷ்ணவ்
    சாந்தனு தாக்கூர்
    வினோத் சோங்கர்
    பங்கஜ் சவுத்ரி
    திலேஷ்வர் காமத்
    சந்திரேஸ்வர் பிரசாத் சந்திரவன்ஷி
    ராம்நாத் தாக்கூர்
    ராஜ்குமார் ரஞ்சன் சிங்
    அஜய் மிஸ்ரா
    பி.எல் வர்மா
    அஜய் பட்
    ஷோபா கரண்ட்லேஜே
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP, Union minister

    அடுத்த செய்தி