அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
கோப்புப் படம்
  • Share this:
அமேசான், பிளிப்கார்ட்போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமித் அகர்வாலுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தொழில் துறை அதிகாரிகள், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளுக்கு மாறாக பொருட்களை விலை குறைவாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்கக்கூடாது என வலியுறுத்தினர்.


ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், குறைந்த விலையில் விற்பனை செய்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இந்தியாவில் உள்ள சில்லரை மற்றும் மொத்த விலை வியாபாரிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்