முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் காங்வர் உள்ளிட்டோர் ராஜினாமா

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் காங்வர் உள்ளிட்டோர் ராஜினாமா

ரமேஷ் பொக்ரியால் நிஷாங்

ரமேஷ் பொக்ரியால் நிஷாங்

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளநிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார்.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார். அதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆளுநர்கள் நியமனம் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. புதிய மற்றும் ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என 43 பேர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சந்தோஷ் காங்வர், டேபாஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

First published:

Tags: BJP, Union cabinet Ministry