நகரமயமாக்கல் திட்டங்களால் வாய்ப்புகள் உருவாகும் - பிரதமர் மோடி

நகரமயமாக்கல் திட்டங்களால் வாய்ப்புகள் உருவாகும் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நகரமயமாக்கல் திட்டங்களால் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், அம்மாநிலத்துக்கு நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த ஏழு வளர்ச்சித் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

  அதன்படி 541 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு குடிநீர் விநியோகத் திட்டங்கள், இரண்டு கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்படுகை மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏழு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  Also read... டிக் டாக்கிற்கு போட்டியாக புதிய ஆப்-ஐ வெளியிட்டது யூடியூப் !

  இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நகரமயமாக்கலால் சில இடையூறுகள் இருந்தாலும் அதனால் வாய்ப்புகளும் அதிகம் என குறிப்பிட்டார். நாட்டின் நகரமயமாக்கலுக்கு அம்பேத்கர் உறுதுணையாக இருந்ததாகவும் மோடி குறிப்பிட்டு பேசினார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: