மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: டெல்லிக்கு பறக்கும் முக்கிய தலைகள்!

கோப்புக் காட்சி

ஜோதிராதித்யா சிந்தியா கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போதில் இருந்தே மத்திய அமைச்சர் பதவியை அவர் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  • Share this:
    மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காக முக்கிய தலைவர்கள் பலரும் டெல்லிக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு அமைந்ததற்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் பெரிதாக மாற்றம் எதுவும் செய்யப்படாமல் உள்ளது.  இந்நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினருமான தாவர்சந்த் கெல்லாட் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவை மாற்றம் தகவல் மேலும் வலுபெற்றுள்ளது.

    இந்த வார இறுதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றம்தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர்  மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளனர்.  ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள்   மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் நாராயண் ரானே ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜோதிராதித்யா சிந்தியா கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போதில் இருந்தே மத்திய அமைச்சர் பதவியை அவர் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல்,  அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: ஆளுநர்கள் நியமனம்: எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம்...

    நாராயண் ரானே கடந்த  2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  பின்னர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  2017ம் ஆண்டு ‘மகாராஷ்டிரா சுவாபிமன் பக்ஷா’ என்ற கட்சியை தொடங்கி பாஜகவை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்த ரானே,   பின்னர் பாஜக கோட்டாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். கொங்கன் பகுதியில் செல்வாக்கு மிகுந்த தலைவரான அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவது தேர்தலில் தங்களுக்கு பலன் அளிக்கும் என பாஜக மேலிடம் எண்ணுகிறது.  இதனால் மூவருமே டெல்லி பயணத்தை தொடங்கியுள்ளனர்.

    லல்லன் சிங் மற்றும் ஆர்.சி.பி சின்ஹா ஆகியோர் இன்று காலையே சென்று சென்றடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.  பீகாரில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஜனதா தளம் தங்கள் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எனினும், ஒரு மத்திய அமைச்சர் பதவி, ஒரு மாநிலங்களுக்கான அமைச்சர் பதவியை மட்டுமே வழங்க முடியும் என பாஜக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published: