Home /News /national /

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் வழங்க மத்திய அரசு முடிவு!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் வழங்க மத்திய அரசு முடிவு!

RUPAY

RUPAY

ரூபே டெபிட் கார்ட் மற்றும் பீம் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வோருக்கு பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

    டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக, ரூபே டெபிட் கார்ட் மற்றும் பீம் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வோருக்கு பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதேபோல மின்சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய செமி கண்டக்டர்களை, உள்நாட்டிலேயே தயாரிக்க 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், பொருளாதாரம் தொடர்பான மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, அமைச்சர்கள் அனுராக் தாகூர், கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது, செமிகண்டக்டர்ஸ் மற்றும் செல்போன், கணினி போன்றவற்றிற்கான திரைகளை, உள்நாட்டிலேயே வடிவமைக்க மற்றும் தயாரிப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இதற்காக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 76 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட, முடிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

    Also read:  கரப்பான் பூச்சி பீர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை தான் இந்த ஊரில் பலர் விரும்பி குடிக்கிறார்கள்!

    பரிசுத் திட்டம்:

    மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு, 5 டிரில்லியன் டாலர்களை அடைய இத்திட்டம் உதவும் என கூறப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக, ரூபே டெபிட் கார்ட் மற்றும் பீம் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வோருக்கு அதிகபட்சமாக 2,000 ருபாய் வரை பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    பண்ணை உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நாட்டில் உள்ள வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்குமான, பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை அமல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    1,454 கோடி ரூபாயிலான மத்திய அரசின் நிதியுதவியுடன், ஆண்டுகளுக்கான திட்டத்தின் மொத்த மதிப்பு 93 ஆயிரத்து 68 கோடி ரூபாய் எனவும், இதனால், 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Cabinet, Digital India, Union cabinet Ministry

    அடுத்த செய்தி