உற்பத்தி துறைகளுக்கு ₹2 லட்சம் கோடி ஊக்கத்தொகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

உற்பத்தி துறைகளுக்கு ₹2 லட்சம் கோடி ஊக்கத்தொகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நிர்மலா சீதாராமன்

உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

  • Last Updated :
  • Share this:
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 10 துறைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதில், 10 துறைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், சிறப்பு உருக்கு, மூலதன பொருட்கள், தொழில்நுட்ப பொருட்கள், ஏ.சி., எல்இடி பல்புகள் போன்ற பொருட்கள், தொலைத்தொடர்பு, ஜவுளி உள்ளிட்டவை பலனடையும் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

புதிய திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Published by:Vijay R
First published: