முகப்பு /செய்தி /இந்தியா / வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வேளாண் சட்டங்கள்

வேளாண் சட்டங்கள்

நவம்பர் 29ம் தேதி தொடங்கவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில்  வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021, கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுப்பாடு மசோதா 2021 உள்ளிட்ட 26 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்வுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பாக இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவெற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டங்கள் அமலுக்கு வந்தன. எனினும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

நவம்பர் 29ம் தேதி குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இதில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.  இதற்காக வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ அவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடர்பாக  இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

நவம்பர் 29ம் தேதி தொடங்கவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில்  வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021, கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுப்பாடு மசோதா 2021 உள்ளிட்ட 26 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்வுள்ளது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பால் கடும் பதற்றம்

top videos
    First published:

    Tags: Farm laws, Union cabinet Ministry