காஷ்மீரிலும் உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு!

8 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருவாய் உள்ளவர்களை உயர்சாதி ஏழைகளாக அறிவித்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.

news18
Updated: August 6, 2019, 10:31 AM IST
காஷ்மீரிலும் உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு!
அமித் ஷா
news18
Updated: August 6, 2019, 10:31 AM IST
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது காஷ்மீருக்கும் பொருந்தும் என்ற திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

8 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருவாய் உள்ளவர்களை உயர்சாதி ஏழைகளாக அறிவித்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இதுவரை சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்த ஜம்மு - காஷ்மீருக்கும் இந்த சட்டம் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும் வருமான உச்சவரம்பு என்பது ஜம்மு - காஷ்மீருக்கு 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.


இந்த திருத்தப்பட்ட மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதா ஜுலை 1-ம் தேதியே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அடுத்து மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் சட்டமாக்கப்படும்.

இதனிடையே, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை நடைமுறைப்படுத்தாதது குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் 2 வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading...

10% இட ஒதுக்கீட்டை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதிக்காத வகையிலும், உயர்சாதி ஏழைகள் பயன்பெறும் வகையிலும் உடனடியாக 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இட ஒதுக்கீடு தாமதம் ஆவதால் மருத்துவக் கலந்தாய்வு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...