சிறார் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளித்தது கேபினட்..

சிறார் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளித்தது கேபினட்..

ஸ்மிரிதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், பிரியா ரமணி விடுவிக்கப்பட்டதைக் குறித்து கேட்கப்பட்டபோது, சட்டம் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்கும் என பதிலளித்தார் ஸ்மிரிதி இரானி

 • Share this:
  சிறார் சட்டத்திருத்தத்துக்கான செயல்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக, கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிக்க செய்தியாளர்களைச் சந்தித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, சிறார் சட்டத் திருத்தங்கள் அமல்படுத்துவதற்காக சிறார் நலத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் அமைப்புகளை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட மேஜிஸ்திரேட், துணை மாவட்ட மேஜிஸ்திரேட்டுகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

  மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவும் மாவட்ட நீதிபதிகளின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார். குழந்தை நல கமிட்டிகளில் உறுப்பினராகும் முன்பு, தனிநபர்களின் ஆவணங்கள், கல்வி தகுதிகள் ஆகியவை முறையாக சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நலக் கமிட்டி தொடங்கப்படுவதற்கு முன்னதாக, இனி மாவட்ட நீதிபதிகளால் அவற்றின் நோக்கம், திறன் ஆகியவை சரிபார்க்கப்பட்ட பிறகே அதற்கான அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

  தற்போதிருக்கும் சட்டத்தின்படி, சிறார் குற்றங்கள், சிறு குற்றம், தீவிர குற்றம், மிக மோசமான குற்றம் என்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.  “மேலும் ஒரு வகை இதில் சேர்க்கப்படவுள்ளது.  ஏழு வருடங்களுக்கு மேல் தண்டனையளிக்கப்பட்டு குறைந்தபட்ச தண்டனை பரிந்துரைக்கப்படாத குற்றங்கள் தீவிர குற்றங்களாக கருதப்படும்” என்பதும் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

  முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், பிரியா ரமணி விடுவிக்கப்பட்டதைக் குறித்து கேட்கப்பட்டபோது, சட்டம் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்கும் என பதிலளித்தார்.
  Published by:Gunavathy
  First published: