• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா தடுப்பூசி பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித் ஷா!

கொரோனா தடுப்பூசி பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித் ஷா!

அமித்ஷா

அமித்ஷா

இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை எனவும், சிஏஏ குறித்து இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்படத்தேவையில்லை எனவும் அமித்ஷா கூறினார்

  • Share this:
மேற்குவங்க தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததற்கு எழுந்த எதிர்ப்பும் கடந்த ஆண்டு இதற்காக நடைபெற்ற போராட்டங்களும் களேபரங்களாக அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில் தான் கொரோனா பரவல் இந்தியாவில் ஏற்பட்டது. இதனையடுத்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கிப் போனது.

இந்நிலையில் தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்குவங்கத்தில் பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு இங்கு கிடைத்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அக்கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்குவங்கத்தின் தாக்கூர் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சிஏஏ குறித்து தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், தனிப்பட்ட வகையில் இங்கு மீண்டும் வந்து குழப்பங்களை தீர்த்து வைப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும், இது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை எனவும், சிஏஏ குறித்து இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்படத்தேவையில்லை எனவும் அவர் கூறினார்

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து பெரும்பாலான இஸ்லாமியர்கள் மேற்குவங்கத்தில் ஊடுருவி வசித்து வருவதாக கூறப்படும் நிலையில் சிஏஏ விவகாரம் அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் அமித்ஷாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: