சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சி வோட்டர் நிறுவனம் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளுக்கு வரும் 12 மற்றும் 20-ம் தேதிகளிலும், 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற 28-ம் தேதியும், 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த தேர்தல், அதற்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசம்
இந்நிலையில், சி வோட்டர் நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 116 தொகுதிகளிலும், பாஜக 107 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 15 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முதல் அமைச்சர் பொறுப்புக்கு காங்கிரஸின், ஜோதிர்ஆதித்ய சிந்தியாவிற்கு 42.5 சதவிகிதம் பேரும், தற்போது முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 37 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரான கமல்நாத் முதலமைச்சராக 8.2 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.
ராஜஸ்தான்
பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 145 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும், ஆளும் பாஜகவுக்கு 45 சீட் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கரை பொறுத்தவரையில், 43 இடங்களில் பாஜகவுக்கு சாதகமான சூழல்கள் நிலவுவதாகவும், இதற்கு மிக நெருக்கமாக 41 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா
இதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெறும் என்றும், மிசோரம் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chhattisgarh, Madhya pradesh, Mizoram, Rajasthan, Telangana