முகப்பு /செய்தி /இந்தியா / ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ; தமிழிசை, எல்.முருகன் நேரில் வாழ்த்து!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ; தமிழிசை, எல்.முருகன் நேரில் வாழ்த்து!

ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று வாழ்த்து. செய்தியாளர் - சுபாஷ் பிரபு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil |

தமிழக பாஜகவில் மூத்த தலைவரும் கேரள மாநிலத்தின் பாஜக பொறுப்பாளராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலம், ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து விதமான பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

ராஜினாமா கடிதத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கட்சியின் முன்னணி தலைவர்களை முன்னிலையில் அவர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா மற்றும் வழியனுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜகவின் கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்றது.

அதை தொடர்ந்து, இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநராக ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர் பதவியேற்பு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் அம்மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த்சோரன், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

First published:

Tags: CP Radhakrishnan, Jharkhand, Tamil News, Tamilisai Soundararajan