ஹோம் /நியூஸ் /இந்தியா /

7 தொகுதி இடைத்தேர்தல்.. 4 தொகுதியில் பாஜக வெற்றி.. தெலங்கானாவில் கடைசிவரை டஃப்!

7 தொகுதி இடைத்தேர்தல்.. 4 தொகுதியில் பாஜக வெற்றி.. தெலங்கானாவில் கடைசிவரை டஃப்!

இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி

இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி

7 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  உத்தரப் பிரதேசம், ஹரியானா, பீகார், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களை பாஜக கைப்பற்றி தன்வசம் இருந்த தொகுதிகளை தக்கவைத்துக்கொண்டது. குறிப்பாக, தெலங்கானா மாநில இடைத்தேர்தலில் ஆளும் தெலங்கானா ரஷ்டிரிய சமிதி மற்றும் பாஜக வேட்பாளர்களே இடையே கடும் போட்டி நிலவியது.

  உத்தரப் பிரதேச மாநிலம் கோலா கோக்ரநாத் (Gola Gokrannath) சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 34,298 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் அரவிந்த் கிரி மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

  வன்கொடுமை.. ஆபாசப்படம்.. போக்சோ வழக்குகளுக்கு நீதிமன்றம் சொன்ன முக்கிய கருத்து!

  ஹரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதிகளில் பாஜக வேட்பாளர் பவ்யா பீஷ்னோய் (Bhavya Bishnoi) தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 15,740 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

  ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பீஜு ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள தாம்நகர் (எஸ்சி) சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக இருந்த பிஷ்ணு சேதி மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்று. இதில், அவரது மகன் சூரிய வன்ஷி சூரஜ் பாஜக வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜூ ஜனதாதளம் வேட்பாளர் அபந்தி தாசை விட சூரிய வன்ஷி 9,881 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

  பீகாரில் மோகமா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணியான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் நீலம் தேவி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோனம் தேவியை விட 16, 741 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அதேவேளை, கோபால் கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் குசும் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் மோகன் குப்தாவை வெறும் 1,794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பிய தெலங்கானா முனுகோடே (Munogode) வாக்கு எண்ணிக்கை கடும் போட்டியுடன் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜக வேட்பாளர்கள் கடும் தீவிரமாக களம் கண்டனர். இந்நிலையில், பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி பாஜக வேட்பாளர் ராஜகோபல் ரெட்டியை விட 9,146 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

  இதையும் படிங்க: மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர் - இமாச்சலில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி!

  மகாராஷ்ட்டிரா அந்தேரி கிழக்குத் தொகுதியில் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவை உத்தவ் தலைமையிலான சிவசேனா வேட்பாளராக அறிவித்தது. இதனால், பாஜக-ஏக்நாத் ஷிண்டே தரப்பு போட்டி வேட்பாளரை நிறுத்தவில்லை.இதையடுத்து ருதுஜா லட்கே 66,530 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: BJP, By election, Election Result, RJD, TRS