BYJU'S Young Genius : இளம் ட்ரம்ஸ் கலைஞர் ஸ்டீவன் சாமுவேல், ஆப் வடிவமைப்பாளர் அனுப்ரதா பங்கேற்பு

BYJU'S Young Genius : இளம் ட்ரம்ஸ் கலைஞர் ஸ்டீவன் சாமுவேல், ஆப் வடிவமைப்பாளர் அனுப்ரதா பங்கேற்பு

ஸ்டீவன் சாமுவேல், அனுப்ரதா

சி.என்.என் நியூஸ்18 தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் பைஜூஸ் இளம் வல்லுநர்கள் நிகழ்ச்சியில் இளம் ஆப் வடிவமைப்பாளர் அனுப்ரதா சர்கேர் மற்றும் இளம் ட்ரம்ஸ் வாசிப்பாளர் ஸ்டீவன் சாமுவேல் டிவாஸி பங்கேற்கின்றனர்.

  • Share this:
    உலக அளவில் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் ட்ரம்ஸ் வாசிப்பதில் 8 கிரேட் தேர்வுகளையும் முடித்த மிகக் குறைந்த வயது சிறுவன் ஸ்டீவன்தான். ஸ்டீவன் சாமுவேலுக்கு வயது 14. வேகமாக டிரம்ஸ் வாசிக்கும் சாதனையையும் ஸ்டீவன் படைத்துள்ளார். ஸ்டீவனுக்கு வயது 14-ஆக இருந்தாலும், அவரை அமெரிக்காவில் பல்வேறு இசைக் குழுக்கள் கச்சேரிக்கு தொடர்ந்து அழைக்கின்றன.

    பைஜூஸ் இளம் வல்லுநர் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து ஸ்டீவன் மிகந்த ஆச்சர்யமாக உணர்கிறான். இதுகுறித்து தெரிவித்த ஸ்டீவன், ‘இந்த விருதை வாங்குவதை நான் பெருமையாக உணர்கிறேன். எனக்கு மிகந்த ஆதரவு அளித்த என்னுடைய குடும்பத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 3 வயதில் ட்ரம்ஸ் பழகும்போதிலிருந்தே ஸ்டீவன் அவனுடைய இசைப் பயணத்தை தொடங்கியுள்ளான். ஐந்து வயதிலிருந்து ட்ரம்ஸ் சிவமணியில் வழிகாட்டுதலில் ட்ரம்ஸ் வாசிக்கக் கற்றுள்ளான் ஸ்டீவன். இதுகுறித்து தெரிவிக்கும் ஸ்டீவன், ‘சிவமணி மாமாவின் தாக்கம் என் மீது அதிகமாக இருக்கும். மற்றொருவர் எனது மாமா ப்யானோ கலைஞர் ஸ்டீபன் தேவஸி. இந்த இருவரும் தற்போது நான் இசைக் கலைஞனாக இருப்பதற்கு முன்னோடியாக இருந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

    ஸ்டீவன் சாமுவேல்


    ஸ்டீவன், அவனுக்கு 12 வயது இருக்கும்போதே சூப்பர் கிட்ஸ் என்ற பெயரில் இசைக்குழுவைத் தொடங்கியுள்ளான். தற்போது, கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உப்பளப்பு ராஜேஷின் இசைக்குழுவில் ஸ்டீவனுக்கு ஒரு பகுதியாவான். ஸ்டீவன் ஏற்கெனவே, ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம் இசை நிகழ்ச்சி மற்றும் சர்வதே திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளான். ஸ்டீவனின் 10,000 காரணங்கள் பாடல் யூட்யூப்பில் 40 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. கிராமி விருதை வெல்வதுதான் தனது லட்சியம் என்று ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

    பைஜூஸ் இளம் வல்லுநர்கள் நிகழ்ச்சியில் இந்த வாரம் பங்கேற்கும் மற்றொரு நபர் அனுப்ரதா சர்கேர். அவருக்கு வயது 10. அனுப்ரதா சர்கேர் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லவராக திகழ்ந்துவருகிறார். தற்போது வரையில், அங்கிகாரம் கிடைத்த 7 ஆப்களை உருவாக்கியுள்ளார். அனுப்ரதா உருவாக்கியதில், ‘பயன்பாட்டு ஆப், குஆர்டி கோட் ஸ்கேனர், சாட் ஆப், விளையாட்டு ஆப் ஆகியவை அடங்கும். அனுப்ரதா உருவாக்கிய ஆப்கள் அனைத்தும் கூகுள் ப்ளேஸ்டாரில் கிடைக்கின்றன. அவருடைய ஆப்கள் பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சாட்டிங் ஆப்பான மீட் ஆப் ஏராளமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா மீட்பு, விவசாயிகளின் பள்ளி, ஆரோக்கிய ஆப், குழந்தைகளைக்கு கதை சொல்லல், போட்டோக்களை அடையாளம் காணும் ஆப் உள்ளிட்ட ஆப்களையும் சர்கேர் உருவாக்கியுள்ளார்.

    அனுப்ரதா சர்கேர்


    இதுகுறித்து தெரிவிக்கும் அனுப்ரதா, ‘ஆப்கள் உருவாக்குவது எனக்கு பிடிக்கும். கோடிங் என்பது எப்போதுமே எனக்கு பிடித்த விஷயமாக இருந்துவருகிறது. இந்த விருதை வெல்வதை பெருமையாக உணர்கிறேன். இதன்மூலம், நான் என்ன செய்தேன் என்பதை உலகுக்கு சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெத் ஆப் மற்றும் காவல்துறை அலெர்ட் ஆப் உருவாக்கியுள்ளேன். காவல்துறையினருக்கு உதவுவதற்காக இந்தப் ஆப் உருவாக்கியுள்ளேன். நான் ஒரு ஆப் உருவாக்கும்போது மக்களுக்கு என்ன தேவை உள்ளது என்பது சிந்தித்து உருவாக்குவேன்’என்று தெரிவித்துள்ளார்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: