Byju's Young Genius | நாட்டியத் திறமையால் 8 வயதில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி வர்ஷினி
BYJUS Young Genius | 2016ஆம் ஆண்டில் நாட்டியத்திற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் வர்ஷினி.
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 10:30 PM IST
கலைக்கு வயதின் அளவு தேவையில்லை, இதயத்தின் அளவே தேவை. நடனத்தின் இதயத்தில் குடியிருக்கும் வர்ஷினி. வயதோ வெறும் 12... விருதுகளோ எண்ணிக்கையில் அடங்காதவை. 8 வயதிற்குள்ளாகவே கின்னஸ் புத்தகம் இவரை வாரி அணைத்துக் கொண்டது. நாட்டிய உலகம் இவருடைய நடனத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம் பல்லாரியை சேர்ந்தவர் வர்ஷினி. நடனத்தை மற்றுமொறு உயிராகவே கொண்டவர்.
டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து நடனக் கலைஞராகும் ஆசை வந்தது. பின்னர், நடனத்தை கற்றுக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன் என்கிறார் வர்ஷினி. ஆர்வமும், திறமையும் ஒரு சேர அமைந்துவிட்டால் புகழ் தேடி வந்து மாலை சூட்டும். வர்ஷினியின் வாழ்வும் அப்படித்தான். 6 வயதில் இவருக்குள் முளைக்கத் துவங்கிய நடனக்கலை இப்போது ஆழ வேர்விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.
2016ஆம் ஆண்டில் நாட்டியத்திற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் வர்ஷினி. அதனை தொடர்ந்து, 2017ல் கர்நாடகா ராஜ்ய புரஷ்கார் விருது பெற்றார். மேலும், 2018ல் திருப்பதியில் இவருக்கு கல்பாஷ்ரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வர்ஷினியின் நடனத்தை காண்பவர்கள் இமைக்க மறந்து நிற்பதாக இவரை மெருகேற்றிய ஆசிரியர் நெகிழ்ச்சி பொங்க கூறுகிறார். என்னிடம் குச்சிப்புடி, பரதம் இரண்டும் கற்றுக்கொள்கிறாள். மாநில, தேசிய போட்டிகளில் அதிகம் பங்கேற்க வைக்க விரும்புகிறேன். அவர் மிகச்சிறந்த நடனக் கலைஞராக வருவார் என்கிறார் வர்ஷனியின் ஆசிரியர்.
எரியும் விளக்காக இருந்தாலும் தூண்டு கோல் அவசியம் என்பார்கள். அப்படி, குழந்தைகளுக்குள் இருந்து முளைத்தெழும் திறமைகளை குடும்பத்தினர் அங்கீகரிக்க வேண்டும். அப்போது, நாம் நினைப்பது மட்டுமல்ல, நினைக்காத அதிசயங்கள் கூட நடக்கும். நடனம் மட்டுமல்ல, பாடல், இசை, ஓவியம், படிப்பில் கூட வர்ஷினிக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இது தவிர, ஐ ஏ எஸ் ஆக வேண்டும் என்பதும் இவருக்கு ஒரு கனவாம்.
டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து நடனக் கலைஞராகும் ஆசை வந்தது. பின்னர், நடனத்தை கற்றுக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன் என்கிறார் வர்ஷினி. ஆர்வமும், திறமையும் ஒரு சேர அமைந்துவிட்டால் புகழ் தேடி வந்து மாலை சூட்டும். வர்ஷினியின் வாழ்வும் அப்படித்தான். 6 வயதில் இவருக்குள் முளைக்கத் துவங்கிய நடனக்கலை இப்போது ஆழ வேர்விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.
2016ஆம் ஆண்டில் நாட்டியத்திற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் வர்ஷினி. அதனை தொடர்ந்து, 2017ல் கர்நாடகா ராஜ்ய புரஷ்கார் விருது பெற்றார். மேலும், 2018ல் திருப்பதியில் இவருக்கு கல்பாஷ்ரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.