BYJUS YOUNG GENIUS APP WHIZ ANUBRATA SARKER AND MUSICIAN STEVEN SAMUEL DEVASSY SHARE THEIR INSPIRATIONS SKD
BYJU'S Young Genius: இளம் ஆப் டெவலப்பர் அனுப்ரதா, ட்ரம்ஸ் கலைஞர் ஸ்டீவன் ஆகியோரின் அனுபவங்கள்
அனுப்ரதா, ஸ்டீவன் சாமுவேல்
பைஸூஸ் இளம் மேதை நிகழ்ச்சியில இந்த வாரம் 14 வயது ட்ரம்ஸ் கலைஞர் ஸ்டீவன் சாமுவேல் மற்றும் 10 வயது ஆப் டெவலப்பர் அனுப்ரதா சர்கேர் பங்கேற்கின்றனர். அவர்கள், அவர்களது பயணம் குறித்து விளக்குகின்றனர்.
பத்து வயது சிறுவன் அனுப்ரதா ஆப் விஸ் அல்லது வங்கதேசத்தின் அதிசயச் சிறுவன் என்று அழைக்கப்படும் அதேவேளையில் உலகின் வேகமான ட்ரம்ஸ் வாசிப்பாளர் என்ற நிலையை 14 வயதிலேயே அடைந்துள்ளார் ஸ்டீவன். நாளை ஒளிபரப்பாகும் பைஜூஸ் இளம் மேதையின் நிகழ்ச்சியின் முதல்பகுதியில் ஸ்டீவன் சாமுவேல் குறித்த பகுதி ஒளிபரப்பாகிறது. 14 வயதில் உலகின் மிகவேகமான ட்ரம்ஸ் வாசிப்பாளராகத் திகழும் ஸ்டீவனுக்கு அவருடைய பாடல் கிராமி விருதை வெல்ல வேண்டும் என்பது ஆசை.
அவருடைய பயணம் குறித்து விளக்கும் ஸ்டீவன், ‘நான் மூன்று வயதிலிருந்தே ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய 5 வயதில் மேடையில் லைவ் நிகழ்ச்சியில் சிவமணி மாமாவுடன் வாசித்துள்ளேன். சிவமணி மாமாவின் தாக்கம் என் மீது அதிகமாக இருக்கும். சிவமணி மாமா என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இப்போது நான் அவரை அழைத்தாலும், தொடர்ந்து என்னை பயிற்சி எடுக்கச் சொல்வார். பயிற்சி ஒருவரை சிறந்தவராக மாற்றும். நான் தினமும் 4 மணி நேரம் பயிற்சி செய்கிறன். ஆனால், நான் அதுகுறித்து கவலை கொள்வது கிடையாது. நான் பாடல்களை விரும்புகிறேன். ட்ர்ம்ஸ் வாசிப்பதை விரும்புகிறேன். இசைக்கு எப்போதும் முடிவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இளம் மேதை நிகழ்ச்சியில் இரண்டாவது பகுதியில் மிகச்சிறந்த ஆப் வடிவமைப்பாளர் அனுப்ரதா சர்கேர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதுவரையில், அவருடைய 9 ஆப்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் இருக்கின்றன. தற்போது 10-வது ஆப்பை வடிவமைத்துவருகிறார். அனுப்ரதா உருவாக்கியதில், ‘பயன்பாட்டு ஆப், குஆர்டி கோட் ஸ்கேனர், சாட் ஆப், விளையாட்டு ஆப் ஆகியவை அடங்கும். அனுப்ரதா உருவாக்கிய ஆப்கள் அனைத்தும் கூகுள் ப்ளேஸ்டாரில் கிடைக்கின்றன. அவருடைய ஆப்கள் பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சாட்டிங் ஆப்பான மீட் ஆப் ஏராளமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மீட்பு, விவசாயிகளின் பள்ளி, ஆரோக்கிய ஆப், குழந்தைகளைக்கு கதை சொல்லல், போட்டோக்களை அடையாளம் காணும் ஆப் உள்ளிட்ட ஆப்களையும் சர்கேர் உருவாக்கியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் அலிபுர்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுப்ரதா ஒரு யூட்யூப் சேனலை நடத்துகிறார். அதில், கோட் உருவாக்குவது தொடர்பான வீடியோக்களைப் பதிவேற்றிவருகிறார்.
இதுகுறித்து தெரிவிக்கும் அனுப்ரதா, ‘நான் யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து கோட் உருவாக்குவதற்கு கற்றுக்கொண்டேன். ஆப்கள் உருவாக்குவது எனக்கு பிடிக்கும். கோடிங் என்பது எப்போதுமே எனக்கு பிடித்த விஷயமாக இருந்துவருகிறது. இந்த விருதை வெல்வதை பெருமையாக உணர்கிறேன். இதன்மூலம், நான் என்ன செய்தேன் என்பதை உலகுக்கு சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெத் ஆப் மற்றும் காவல்துறை அலெர்ட் ஆப் உருவாக்கியுள்ளேன். காவல்துறையினருக்கு உதவுவதற்காக இந்தப் ஆப் உருவாக்கியுள்ளேன். நான் ஒரு ஆப் உருவாக்கும்போது மக்களுக்கு என்ன தேவை உள்ளது என்பது சிந்தித்து உருவாக்குவேன்’என்று தெரிவித்துள்ளார்.