ஹோம் /நியூஸ் /இந்தியா /

லாபத்தை அதிகரிக்க 2,500 ஊழியர்கள் பணிநீக்கம் - பைஜூஸ் நிறுவனம் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்

லாபத்தை அதிகரிக்க 2,500 ஊழியர்கள் பணிநீக்கம் - பைஜூஸ் நிறுவனம் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்

2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பைஜூஸ்

2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பைஜூஸ்

முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான(Edutech) பைஜூஸ் தனது வருவாயை பெருக்க 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Bangalore [Bangalore], India

  சில மாதங்களாகவே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக்கொண்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் கடந்த வாரம் வெளியானது.

  கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் போர் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியானது சங்கிலி விளைவாக சர்வதேச நாடுகளை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது.இதுவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான(Edutech) பைஜூஸ் தனது வருவாயை பெருக்க 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

  இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் கூறுகையில், "2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வருவாய் அதிகரிப்பை மேற்கொண்டு லாபம் மிக்க நிறுவனமாக பைஜூஸ்-ஐ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆறு மாதத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள் அதாவது சுமார் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நிறுவனத்தில் போலியான ரோல்களில் உள்ளவர்கள்,தனி நபரின் வேலை திறன், சீரான தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை உறுதி செய்யப்படும் என்றார்.

  இதையும் படிங்க: Digital currency : ஆசையும் ஆர்வமும் மட்டும் இருந்தா போதாது.. டிஜிட்டல் கரன்சி பற்றி இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

  மேலும், புதிதாக 10,000 ஆசிரியர்களை எடுத்து நிறுவனத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறிய திவ்யா, இதில் பாதிப்பேரை இந்தியாவில் இருந்து தான் வேலைக்கு எடுக்கவுள்ளோம்" என்றார். கடந்தாண்டில் சுமார் ரூ.4,588 கோடி நஷ்டத்தை கண்டதாக கூறிய பைஜூஸ் நிறுவனம், 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிதியாண்டின் முடிவில் ரூ.10,000 கோடி வருவாய் என்று தெரிவித்தது. அதேவேளை, இந்த காலகட்டத்தில் லாபம், நஷ்டம் குறித்து எந்த புள்ளி விவரத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிறுவனத்தில் சுமார் 50,000 பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: BYJU'S, Byju's App, Job, Job vacancies