மும்பையைச் சேர்ந்த 5 மாதக் குழந்தை டீரா காமத். இவர் முதுகுத் தண்டுவட தசை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் இந்தக் குழந்தையின் தசைகள் இயக்கம் நரம்புகள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
இது மரபணு நோயாகும். ஸ்பைனல் மஸ்கியுலர் அட்ராபி என்ற இந்த நோய் மிக கொடுமையானது இதற்கு ‘ஸோல்ஜென்ஸ்மா’ என்ற ஒரேமுறை நிகழ்த்தும் மரபணு மாற்ற சிகிச்சைதான் ஒரே வழி.
இந்த நோயினால் தற்போது உலகம் முழுதும் அதிகக் குழந்தைகள் இறந்து வருகின்றன.
இதற்கான ஜீன் தெரபிக்கு சுமார் ரூ.16 கோடி அளவில் செலவாகும். அதோடு 23% இறக்குமதித் தீர்வை, 12% ஜிஎஸ்டி ஆகியவை ரூ.6 கோடி சேர்த்து செலவாகும்.
தீரா காமத்தின் பெற்றோர் பிரியங்கா, மிஹிர் ஆகியோர் சமூகவலைத்தளங்களில் கிரவுட் ஃபண்டிங் மூலம் உதவும் உள்ளங்களின் உதவியுடன் ரூ.12 கோடியை 75 நாட்களில் திரட்டியுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியையும் இணைத்து குழந்தை டீரா காமத்தின் பெற்றோர் இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில், “பெரும் செல்வந்தர்களே கூட ரூ.16 கோடி செலவாகும் என்றால் திணறுவார்கள். சாதாரண நடுத்தரக் குடும்பத்தினர் எப்படி செலவிட முடியும்.
எங்கள் வாழ்நாளில் ஒரு கோடி என்பதை ஆயுளில் கூட பார்க்க முடியாது. அரசின் அனைத்துக் அரசுக் கொள்கைகளும், திட்டங்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கானதே. அங்கு தாங்கள் ஏழை என்று நிரூபித்தால்தான் திட்டங்கள் கைக்கு வரும். எங்களைப் பொருத்தவரை ரூ.16 கோடி என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத தொகை, ஆனால் நாங்கள் ஏழை என்றும் நிரூபிக்க முடியாது. நாம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்ற பிரிவை நீக்கி விட்டு அனைத்து இந்தியர்களுக்கும் என்று திட்டத்தை செயல்படுத்த முடியாதா?
மக்களிடமிருந்து பணம் ரூ. 12 கோடி திரட்டிய போதும், இறக்குமதி வரி, ஜிஎஸ்டி என்று பெருந்தொகை வருகிறது. இதோடு அயல்நாட்டிலிருந்து மருந்தை வரவழைக்க ஏகப்பட்ட முட்டாள்தனமான காகித வேலைகள் வேறு கூடுதலாக உள்ளது. இவற்றையெல்லாம் முடிக்க ஒருமாதகாலமாகும். மருந்து வருவதற்குள் குழந்தை இறந்தே போய்விடும். எனவே இறக்குமதித் தீர்வை, ஜிஎஸ்டி போன்றவற்றை உயிர்காக்கும் மருந்துகளுக்கு தள்ளுபடி செய்யக் கூடாதா?” என்று பிரதமர் மோடியின் சமூகவலைத்தள கணக்கையும் டேக் செய்து பதிவிட்டனர்.
இதனையடுத்து இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை மோடி ரத்து செய்துள்ளார். இந்தத் தகவலை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இத்தகைய ஜெனடிக் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் 6 மாதத்திற்கு மேல் உயிருடன் இருப்பது கடினம். இந்நிலையில் 6 மாதத்துக்குள் மருந்தை கொடுத்து குழந்தை டீராவை பிழைக்க வைக்க பெற்றோரின் மாபெரும் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GST, Import duty, Import tax, PM Modi