நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று மூன்றாவது நாளாக ஆஜராகினார். ராகுலுக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அமலாக்கத்துறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மத்திய வருமான வரி துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. நேற்று காலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி,முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் நாம் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் வாருங்கள் என்றும் பேசினார். அப்போது நாராயணசாமி அதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் கட்சி மேலிடம் நமக்கு அதுபோன்ற உத்தரவு எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறினார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், எல்லாவற்றுக்கும் நீங்கள் அடக்க வேண்டாம் என்றும் கட்சி ஒருவருடையது அல்ல, நிர்வாகிகள் அனைவரும் ஆதங்கத்தில் இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற அடக்கு முறையை நீங்கள் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார்.இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெரிய அளவிற்கு சலசலப்பு ஏற்பட்டு கட்சியின் நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.