விமானத்தைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்து ஆயுள் தண்டனை பெற்ற தொழிலதிபர்!

மிரட்டலைத் தொடர்ந்து விமானம் அவசரமாக அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், பிர்ஜி சல்லா கைது செய்யப்பட்டார்.

News18 Tamil
Updated: June 11, 2019, 7:59 PM IST
விமானத்தைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்து ஆயுள் தண்டனை பெற்ற தொழிலதிபர்!
மாதிரிப் படம்
News18 Tamil
Updated: June 11, 2019, 7:59 PM IST
ஜெட் ஏர்வேஸ் விமானத்தை ஹைஜேக் செய்வேன் என்று மிரட்டிய தொழிலதிபருக்கு சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் 5 கோடி ரூபாய் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜு சல்லா என்பவர் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக விமானநிலையத்தின் கழிவறையிலுள்ள டிஸ்யூ பேப்பரில் எழுதிவைத்தார். மும்பை-டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதியிருந்தார்.

அந்த மிரட்டலைத் தொடர்ந்து விமானம் அவசரமாக அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், பிர்ஜி சல்லா கைது செய்யப்பட்டார். இந்த மிரட்டலைத் தொடர்ந்து, முதன்முறையாக விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நபர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும், விமானக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவரிடம் நடந்த விசாரணையில், விமானத்தை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘இந்த மிரட்டலின் காரணமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லியில் செயல்படும் அலுவலகத்தை மூடிவிடும். டெல்லியில் பணியாற்றும் தனது காதலி மும்பை திரும்பிவிடுவார் என்று நம்பினேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான, வழக்கு சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை கடத்தப்படுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு பிரித்து அளிக்கவேண்டும் என்று தெரிவித்தது.

Also see:

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...