முகப்பு /செய்தி /இந்தியா / இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு மனைவி பாலியல் பலாத்காரம்... நண்பருடன் தொழிலதிபர் கைது

இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு மனைவி பாலியல் பலாத்காரம்... நண்பருடன் தொழிலதிபர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மை அம்பலமாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் கணவரின் நண்பர் பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரில் 35 வயதான பெண் ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் மிகவும் சோர்வாகவும் வலியுடனும் காணப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவரை முழுமையாக சோதித்தனர். அப்போது அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருத்துவர்களுக்குச் சந்தேகம் வரவே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்திய நிலையில்,  பல்வேறு அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகின.

அந்த பெண் காவல்துறைக்கு அளித்த தகவலின்படி, பெண்ணுக்கு அவரது கணவருக்கும் இடையே சண்டை கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இது முற்றிய நிலையில், அவரது கணவர் கடந்து இரண்டு ஆண்டுகளாக கொடூரமான முறையில் கொடுமைபடுத்த தொடங்கியுள்ளார். மனைவியை அவரது விருப்பத்தை மீறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அந்தரங்க உறுப்புகளில் கடுமையாக தாக்கவும் செய்துள்ளார். அத்துடன் நிற்காமல் மனைவியை சங்கிலியில் கட்டி வைத்து அவரும் சென்னையை சேர்ந்த கணவரின் நண்பரும் பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்.. வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை செலுத்தி துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமைகளை செல்போனில் படம் பிடித்து வெளியே விட்டுவிடுவோம் எனவும் பிளாக் மெயில் செய்துள்ளார். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் பொறுத்த வந்த அந்த பெண் கடுமையான உடல் நலன் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான பாதிப்புக்கு இவர் ஆளான நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. காவல்துறையினர் பெண்ணின் வாக்குமூலத்தை பெற்ற நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான கணவரையும், அவரது நண்பரையும் கைது செய்தனர்.

First published:

Tags: Brutal attack on woman, Crime News, Husband Wife, Sexual abuse, Sexual harassment