மலைப் பாதையில் தொங்கிய பேருந்து: பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!

பேருந்து விபத்து

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப் பாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்தது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்து கவிழாக விதம் பார்த்துக்கொண்டார்.

 • Share this:
  இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து ஒன்று  கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் விபத்தில் சிக்கியது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

  இமாச்சல் பிரதேசத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல்,  மிகப்பெரிய அளவில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டது. தற்போது ஓரளவு இயல்புநிலை திரும்பியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் சீர்மோர் மாவட்டத்தில்  தேசிய நெடுஞ்சாலை எண் 707 வழியாக தனியார் பேருந்து ஒன்று பயணித்தது. மலைப் பாதையான இதில் பேருந்து பயணித்தபோது ஷில்லையில் உள்ள போஹ்ராட் காட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. மலைப் பாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கை நோக்கி பேருந்து பாய்ந்து பாதியில்யே செங்குத்தாக நின்றது.

  இதையும் படிங்க:கணவனால் வன்புணர்வுக்கு ஆளான மனைவி: நீதியை நிலைநாட்டிய கேரள நீதிமன்றம்!
  எனினும், பேருந்து பள்ளத்தில் கவிழாத வகையில் அதன் ஓட்டுநர் சாமர்த்தியமாக கட்டுப்படுத்தியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருந்த 22 பயணிகளும்  பத்திரமாக மீட்கப்பட்டனர். இறுதியாக பேருந்தின் ஓட்டுநரும் மீட்கப்பட்டார். பேருந்தின் டயரில்  ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க: வடமாநிலங்களில் தொடரும் கனமழை: உ.பி, ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  Published by:Murugesh M
  First published: