1869ம் ஆண்டு அக்.2ல், குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்த மகாத்மா காந்தி, அகிம்சை முறையில் காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் பலனாக 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுயாட்சி மற்றும் அகிம்சை மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு உலகம் முழுவதும் புகழை பெற்று தந்தது.
இதனால், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு உலகத் தலைவர்களும், உலக அமைப்புகளும் அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய அவரது கருத்துகளை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கின்றனர்.
"Be the change you wish to see in the world” - Mahatma Gandhi. #BurjKhalifa celebrates #Gandhi by honouring the father of a nation who's been an inspiration to many generations. pic.twitter.com/Cx1bcGet3D
அந்தவகையில், மகாத்மா காந்தியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில், காந்தியின் புகைப்படம் ஒளிர்ந்தது.
மேலும், காந்தியின் பொன் வரிகளான "ஒரு கண்ணுக்கு ஒரு கண் முழு உலகையும் குருடனாக்குகிறது" என்ற பெருமை மிகு வாக்கியமும் அதில் இடம்பெற்றது. மின் ஒளியில் இந்திய தேசியக் கொடியுடன் மகாத்மா காந்தி கவுரவிக்கப்பட்ட விதம் அனைவரையும் ஈர்த்தது.
முன்னதாக நேற்றைய தினம், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது பியூஷ் கோயல் கூறியதாவது, "மகாத்மா காந்தி நமக்கு சுதந்திரம் அளிப்பதில் முக்கிய பங்கு வகித்தார், அவர் தேசத்தின் தந்தை, ஒவ்வொரு இந்தியருக்கும் அவர் ஒர் முன்மாதிரி” என்று தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.