ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது!
ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது!
அசாதுதீன் ஓவைசி
Asaduddin Owaisi: உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி நோக்கி ஒவைசி காரில் வந்து கொண்டிருந்தார். சாஜர்சி சுங்கச்சாவடியை கடக்கும் போது 4 பேர் கொண்ட கும்பல், திடீரென அவரது கார் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது.
அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசியின் கார் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி நோக்கி ஒவைசி காரில் வந்து கொண்டிருந்தார். சாஜர்சி சுங்கச்சாவடியை கடக்கும் போது 4 பேர் கொண்ட கும்பல், திடீரென அவரது கார் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது.
நல்வாய்ப்பாக ஓவைசிக்கு இதில் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்ததை தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மீரட் போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், இந்துக்களுக்கு எதிராக ஓவைசி தொடர்ந்து பேசி வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.