நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு நிறைவைக் கொண்டாட பாஜக தயாராகி வருகிறது. இதற்காக தொடர்ச்சியான மக்கள் தொடர்புத் திட்டங்களை செயல்படுத்துவது என மும்மூரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு நிறைவு குறித்து கேட்டபோது, பிரதமர் மோடியை பற்றி புகழ்வதை தவிர வேறு எதுவும் இல்லை. 2001 முதல் 2014 வரை முதல்வராக அவர் பதவி வகித்தபோது, மாநிலத்தின் முன்னேற்றத்தில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.
சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூட வேண்டும் என்ற குஜராத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மோடி செவி சாய்த்து அனுமதி வழங்கினார். இந்த திட்டம் மாநிலத்தின் உயிர்நாடியாக கருதப்படுகிறது. பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. குழுவின் ஒப்புதலுடன், ஜூன் 16, 2017 அன்று மதகுகள் இறுதியாக மூடப்பட்டன. அணையின் கொள்ளளவு 3.75 மடங்கு அதிகரித்து 4.73 மில்லியன் கன மீட்டராக (MCM) கதவணைகள் மூடப்பட்டதால் மாநிலத்தில் வாய்ப்புகள் திறக்கப்பட்டன.
பிரதமர் மோடி மார்ச் 2015ல் குஜராத் அரசுக்கு கச்சா எண்ணெய்க்கான ராயல்டியாக ரூ.763 கோடியை மாநிலத்தின் முன்னுரிமை மற்றும் தேவைகளுக்கு வழங்க ஒப்புதல் அளித்தார். அந்த நேரத்தில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் இது மாநிலத்திற்கு ஆதரவான மற்றொரு பெரிய முடிவாக அமைந்தது.
ராஜ்கோட்டில் எய்ம்ஸ் போன்ற ஒரு மருத்துவமனை அமைய வேண்டும் என நீடித்த கோரிக்கை இருந்தது, மேலும் மாநில முதல்வராக மோடி, அதன் அவசியத்தை புரிந்து கொண்டார். எனவே, பிரதமரான பிறகு, ராஜ்கோட்டில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அவர் ஒப்புதல் அளித்ததால், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாடு நிறைவேறியது, பின்னர் டிசம்பர் 2020ல் அதன் அடிக்கல்லை அவர் நாட்டினார்.
குஜராத்திற்கு மோடி வழங்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க பரிசு அதிவேக புல்லட் ரயில். இந்தியாவின் இரண்டு வணிக மையங்களான மும்பை, அகமதாபாத் மாநிலங்கள் இந்த ரயில் பாதையின் வளர்ச்சியைக் கண்ட முதல் நகரங்களில் ஒன்றாக இருக்கும்.
2017 செப்டம்பர் 14 அன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டது. சமீபத்தில், இந்த திட்டத்தின் கீழ் 98% நிலம் கையகப்படுத்தல் குஜராத் பிராந்தியத்தில் இருந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
துறை சார்ந்த கல்வியில் மாநிலத்தின் திறமையை ஒப்புக்கொண்டு, 2018 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று, போக்குவரத்து நிர்வாகத்தில், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் படிப்புகளை வழங்கும் இந்தியாவின் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை வதோதராவில் மோடி திறந்து வைத்தார்.
ராஜ்கோட்டில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தவும் மோடி உதவியுள்ளார். அகமதாபாத்-ராஜ்கோட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ரூ.1,405 கோடி மதிப்பீட்டில் 1,000 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்படுகிறது. குஜராத்தின் நான்காவது பெரிய நகரமாகவும், சவுராஷ்டிராவின் வணிகத் தலைநகராகவும் விளங்கும் ராஜ்கோட், உற்பத்தித் தொழில்களால் சூழப்பட்டுள்ளது. எனவே, இந்த சர்வதேச விமான நிலையம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவதற்கு டெல்லியைத் தவிர மற்ற மாநிலங்களுக்கும் சமமான முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது நரேந்திர மோடியின் முக்கிய நோக்கமாகும். அத்தகைய ஆளுமைகளை வரவேற்கும் இடங்களின் பட்டியலில் குஜராத் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் அதன் விருந்தோம்பல் ஆகியவை முக்கியமான பயணத்தின் போது உலகளவில் எப்போதும் பேசப்படும் என்று முதல்வர் படேல் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.