Home /News /national /

பெண்ணிடம் இழிவாக பேசி பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்ற புல்டோசர்.. ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிரடி நடவடிக்கை

பெண்ணிடம் இழிவாக பேசி பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்ற புல்டோசர்.. ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிரடி நடவடிக்கை

பாஜக பிரமுகர் இல்லத்தில் புல்டோசர் நடவடிக்கை

பாஜக பிரமுகர் இல்லத்தில் புல்டோசர் நடவடிக்கை

தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர் தனது குடியிருப்பில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் புல்டோசர் மூலம் அகற்றும் அதிரடி நடவடிக்கையை உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Noida, India
    தன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை இழிவாக பேசி தகராறு செய்த பாஜக பிரமுகரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்ய தேடி வருகிறது. இவர் கடந்த இரு நாள்களாக தலைமறைவாக உள்ள நிலையில் இவர் தனது குடியிருப்பில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் புல்டோசர் மூலம் அகற்றும் அதிரடி நடவடிக்கையை உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கிராண்ட் ஓமாக்சே என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீகாந்த் தியாகி என்ற நபர் வசித்து வருகிறார். இவர் பாஜகவில் கிசான் மோர்ச்சா பிரிவில் பொறுப்பில் உள்ளார். இவர் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் கீழ் பகுதியில் உள்ள பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பங்களை மீறி மரம் நடுதல் போன்ற ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கீழ் தளத்தில் வசிப்பவர்களுக்கு இது இடையூறாக உள்ளதாக கூறப்படும் நிலையில், கீழ் தளத்தில் வசிக்கும் பெண் ஒருவர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகரிடம் குடியிருப்பு வாசலில் கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு அந்த பெண்ணை பாஜக பிரமுகர் கடுமையாக பேசியும், இழிவாக திட்டியும் வசைபாடியுள்ளார்.பாஜக பிரமுகர் அந்த பெண்ணை இழிவாக பேசுவதை அருகே உள்ள நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அது வைரலான நிலையில், பாஜக பிரமுகரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    இவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், இன்று காலை அவரது இல்லத்திற்கு புல்டோசருடன் சென்ற நொய்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அவர் குடியிருப்பில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றி வருகிறது.


    யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் தலைமறைவாக உள்ள அந்த பாஜக பிரமுகரை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள ஸ்ரீகாந்த் தியாகியை பிடிக்க 12 தனிப்படையை காவல்துறை அமைத்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ராக்கி அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி.. 2024 தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து!

    அத்துடன், அந்த நபர் மீது எஃஐஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையமும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Noida, Viral Video

    அடுத்த செய்தி